பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

கூறான் - புறம் பேசாதவன், என்றல் - என்று உலக மக்களால் பேசப்படுதல், நன்று - மிகவும் நல்லதாகும்.

(கரை) ஒருவன் அறத்தினைச் செய்யாமல் தீயவற். றைச் செய்தாலும்கூடப் புறங்கூறாதவன்" என்று கக்களால் சொல்லப்படுதல் நல்லதாகும்.

2. அறன் அழிஇ அல்லவை செய்தலின் தீதே

புறன் அழிஇப் பொய்த்து நகை.

(ப-ரை அறம் . அறத்தினை, அழி இ - அழித்துப் பேசி அல்லவை . அறம் அல்லாத தீமைகளை, செய்தலின். செய்வதைக் காட்டிலும், புறனழீஇ - ஒருவனைக் காணாத போது அவனை இழிவாகப் பேசி, பொய்த்து கண்டபோது அவனுடன் பொய்யாக, நகைத்துப் பேசும் செயல், தீதே தீமையாகும்.

(க-ரை) ஒருவனைக் காணாதபோது இகழ்ந்து பேசி, கண்டபோது பொய்யாகச் சிரித்துப் பேசுதல் என்பது, அறம் இல்லையென அழித்துப் பேசி தீமைகளைச் செய் வதைவிடத் தீமையானதாகும்.

3. புறங்கூறிப் பொய்த்து உயிர்வாழ்தலின் சாதல்

அறம்கூறும் ஆக்கம் தரும். (ப-ரை) புறங் கூறி - புறம் பேசி, பொய்த்து - கண்ட போது பொய்யாகப் புகழ்ந்து பேசி, உயிர் . உயிருடன், வாழ்தலின் - வாழ்வதைவிட, சாதல் - இறந்துவிடுதல், அறம் கூறும் - அறநூல்கள் விதிக்கின்ற, ஆக்கம்தரும் நற்பயனை அவனுக்குத் தருவதாகும்.

(கரை) புறம் பேசிப் பொய்ம்மையான வாழ்க்கைமில் வாழ்வதைவிட அது செய்யாமல் இறந்துவிடுதல், அறநூல் களில் சொல்லப்படுகின்ற நற்பயனை அவனுக்குத் தருவதாகும்.