பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

படுவது - வைத்து எண்ணப்படுவது, ஒன்று ஒன்று. அன்று . அல்ல என்பதாம். (எல்லாவற்றினும் மிகுதியான குற்றமாகும்! . -

(கரை) செய்யவேண்டிய ஈகைச் செயல்களைச் செய்யாம்ல் கருமித் தணத்தால் பற்றுதலை வைத்திருக்கும் அத்தன்மை, குற்றமான தன்மைகளுள் ஒன்றாக வைத்து எண்ணப்படுவதொன்று அன்று: அது மிகுந்த குற்றமாகும்.

9. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை கயவற்க

நன்றி பயவா வினை. 439

(ப-ரை) எஞ்ஞான்றும் - தான் மிக உயர்ந்திருக்கும் காலத்திலும், தன்னை - தன்னை, வியவற்க - செருக்கினால் மதியாதிருப்பானாக, நன்றிபயவா. நன்மையினை உண்டாக் காத, வினை செயல்களை, தயவற்க - மனதில் விரும்பா திருப்பானாக.

(கரை) செருக்கினால் எப்போதும் தன்னைத்தானே மதித்துக் கொள்ளாதிருப்பாயாக தனக்கு நன்மையினை உண்டாக்காத தொழில்கை மனத்தால், விரும்பா திருப்பாயாக. - - -

10. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல். 440

(ப-ரை) காதல - தான் காதலிக்கின்ற பொருள்களை, காதல் அறியாமை - அவ்விருப்பத்தினை (காதலினை)ப் பகைவர் அறிந்து கொள்ளாமல், உய்க்கிற்பின் . நுகர் வதற்கு வல்லவனாகிய பிறகு, ஏதிலார் - பகைவர், நூல் . தன்னை வஞ்சிக்க எண்ணும் எண்ணம், ஏதில - பழுதாகி விடும். . - - -

(கரை) தான் விரும்பிய (காதலித்த) பொருள்கள் யாவையென்று தமது விருப்பத்தினைப் பகைவர் அறிந்து கொள்ளாதபடி அனுபவிக்க வல்லவனானால், அப்பகைவர்