பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197

அறிந்து கொள்ளாதபடி அனுபவிக்க வல்லவனானால், அம். பகைவர் தன்னை வஞ்சிக்க எண்ணும் எண்ணம் பழுதாகி விடும். . # .

45. பெரியாரைத் துணைக் கோடல்

(எல்லா வகைகளிலும் பெரியார்களானவர்களைத் துணையாக வைத்துக் கொள்ளுதல்

1. அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறன் அறிந்து தேர்ந்து கொளல். 441 (ப-ரை அறன் . அறத்தினது சிறப்பினை, அறிந்து - அறிந்த, மூத்த அறிவுடையார் - தன்னைவிடமுத்த அறி வுடையவர்களுடைய, கேண்மை . நட்பினை, தேர்ந்து - அதனது சிறப்பினைத் தெரிந்து, திறன் . கொள்ளும் திறத்தினை, அறிந்து - அறிந்து, கொளல் - துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.

(கரை அறத்தினது சிறப்பினையறிந்து தன்னைவிட மூத்த அறிவுடைய பெரியார்களது நட்பின் ஒருமையின்ை. யறிந்து தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும். پی

2. உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல், 442

(ப-ரை உற்றநோய் - தனக்கு வந்த துன்பங்களை, நீக்கி. நீக்கும் வழியறிந்து நீக்கி, உறாமை - பிறகு அத் துன்பங்கள் வாராதபடி, முற்காக்கும் . முன்னதாகவே காக்கவல்ல, பெற்றியார் - ஆற்றல் மிக்க தன்மையுடைய வர்களை, பேணிக்கொளல். அவர் மகிழ்வன செய்து துணையாகக் கொள்ளுதல் வேண்டும். ‘. . .

க-ரை தனக்குவரும் துன்பங்களை நீக்கும் வழி யறிந்து நீக்கி, பிறகு அவ்வாறான துன்பங்கள் தனக்கு