பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98

வாராதபடி முன் அறிந்து காக்க வல்ல தன்மையுடைவர் களை அவர்கள் மகிழ்வதைச் செய்து துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.

3. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல். 443

(ப-ரை பெரியாரை ஆற்றல் மிகுந்த பெரியா? களை, பேணி . அவர் மகிழ்வனவற்றைச் செய்து, தமராக் கொளல் . தமக்கு உற்றவராகக் கொள்ளுதல், அரிய வற்றுள் . அருமையான பேறுகள், எல்லாம் - எல்லாவற் றுள்ளும், அரிதே அரியதாகும் (சிறந்ததாகும்;

(க-ரை ஆற்றல் மிகுந்த பெரியார்களை அவர் மகிழ்வன செய்து தமக்குச் சிறந்த துணையாகக் கொள்ளுதல், அரிய செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் அரிதானதாகும்.

4. தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையுள் எல்லாம் தலை. 444

(ப-ரை தம்மின் - அறிவுமுதலியவற்றால் தம்மைவிட, பெரியார் . பெரியவர்களை, தமரா - தமக்கு உற்றவராகக் கொண்டு, ஒழுகுதல் - அவர்வழிநின்றுநடந்து கொள்ளுதல், வன்மையுள் - வலிமைகள், எல்லாம் - எல்லாவற்றையும் விட, தலை . முதன்மையானதாகும்.

(கரை) அறிவு முதலியவற்றினால் தம்மைவிட மிகுந்தவர்களைத் தமக்குச் சிறந்தவராகக்கொண்டு நடந்து கொள்ளுதல் எல்லா வலிமைகளைக் காட்டிலும் தலைமை கமானதாகும்.

5. சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல், 445

(ப-ரை) சூழ்வார் - சூழ்ந்துள்ள பெரியார்களை, கண்ணாக - கண்களாகக் கொண்டு, ஒழுகலால் - தன்