பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267

விழாவைன் . விரும்புவான், தன் . தன்னுடைய, கேளிர் " சுற்றத்தார், நண்பர்களுடைய, துன்பம் - துன்பத்தினை, துடைத்து - நீக்கி, ஊன்றும் தூண் . அதனைத் தாங்கும். துணாகும்.

(கரை) தனக்கு இன்பத்தினை விரும்பாதவனாகித். தொழில் முடிப்பதையே விரும்புகிறவன், தன் சுற்றத். தாரின் துன்பத்தினை நீக்கிச் சுற்றத்தாராகிய பாரத் தினைத் தாங்கும் தூணாகவும் ஆவான்.

6. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும். 516. .

(ப-ரை முயற்சி - முயற்சியானது, திருவினை . செல்வத்தினை, ஆக்கும் - வளர்க்கும், முயற்று - அம்முயற்சி இன்மை - இல்லாமையானது, இன்மை - வறுமையினை, புகுத்தி விடும் - சேர்த்து விடும்.

(கரை) முயற்சியானது செல்வத்தினை வளர்க்கும். அம்முயற்சி இல்லாதிருப்பதானது வறுமையில் கொண்டு : போய் விட்டுவிடும்.

7. மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளாள் தாமரையி னாள். 517

(ப-ரை மாமுகடி - கரிய சேட்டையானவள், மடி. உளாள் - ஒருவனுடைய சோம்பலின் கண்ணே இருப்ப வளாவாள், தாமரையினாள் . தாமரையினாள் என்னும் திருமகள், மடி - சோம்பல், இலான் - இல்லாதவனுடைய, தாள் - முயற்சியினிடத்தில், உளாள் என்ப . இருப்பான் என்று அறிந்தோர் சொல்லுவர்,

(க-ரை) க ரி ய சேட்டையானது ஒருவனுடைய சோம்பலினிடத்திலே வாசம் செய்யும். திருமகள் மடி. யில்லாதவனுடைய முயற்சியினிடத்தே தங்கியிருப்பாள். என்று அறிந்தோரி சொல்லுவர்.