பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

8. பொறிஇன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி. - 618 (ப-ரை) பொறி . பயனைத் தரும் விதி, இன்மை . இல்லாமையானது, யார்க்கும் - எவர்க்கும், பழி - பழி . அன்று . அல்ல, அறிவு அறிய வேண்டுவனவற்றை, அறிந்து - அறிந்து தெரிந்து, ஆள்வினை- முயன்று தொழில் செய்தல், இன்மை - இல்லாதிருப்பதே, பழி - ஒருவருக்குப் பழியாகும்.

(க-ரை பயனைத் தருவதாகிய விதி இல்லாமை ஒருவற்குப் பழி ஆகாது. அறிய வேண்டியவற்றை அறிந்து முயன்று தொழில் செய்யாமையே பழியாகும்.

9. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலிதரும். 619 (ப-ரை தெய்வத்தான் - ஊழ்வகையான், ஆகாது . கருதிய பயனைத் தாராதாயினும், முயற்சி . முயற்சி யானது, தன் - தனக்கு இடமாகிய, மெய் - உடம்பு, வருத்த - வருந்திய வருத் தத்தின், கூலி. கூலி அளவு, தரும் பயனைத் தருவதாகும் (வீண் போகாது)

|க-ரை முயன்ற தொழில் ஊழ்வினையால் கருதிய பயனைத் தராமல் போனாலும், வருந்திய வருத்தத்தின் கூவி அளவு பயனைத் தரும்; வீண் போகாது.

10. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித்

தாழாது உஞற்று பவர். 620 (ப-ரை) உலைவு - தளர்ச்சி, இன்றி - இல்லாமல்: தாழாது. தாழ்வு இல்லாமல், உஞற்றுபவர் - தொழிலில் முயற்சி செய்வோர், ஊழையும் . பயனை விலக்குகின்ற ஊழையும், உப்பக்கம் - புறமாகியபின் பக்கம், காண்பர் காண்பார்கள். r

(கரை) ஊழ்வினைச் செயலுக்கு இளைக்காமல் "தொழிலில் தாழ்வில்லாமல் முயற்சி செய்பவர்கள், பயனை விலக்குவதாகிய ஊழினையும் புறங்காண்பர்.