பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492

உண்டாக்கிய காதலர்க்கு, உரைத்தலும் - உரைப்பது ம் நாணு . நாணத்தினை, தரும் - கொடுப்பதாகும்.

(கரை) இந்த நோயினை மறைக்க முடியாதவளா கின்றேன்; நோயினை உண்டாக்கினவர்க்கு எடுத்துக் கூறலாமென்றாலோ, நாணமாக இருக்கின்றது. என் செய்வேன்?

3. காமமும் காணும் உயிர்காவத் துவங்கும்என்

கோனா உடம்பின் அகத்து. 1 163

(ப-ரை காமமும் நாணும் - காமநோயும் நாணமும், நோனா - தம்மைத் தாங்க முடியாத, என் . எனது, உடம்பினகத்து - உடம்பினிலே, உயிர் - உயிரினை,

காவா - காவடித்தண்டாக, (வைத்து) தாங்கும் . இரு முனைகளிலும் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

(க-ரை) காமமாகிய நோயும் தம்மைத் தாங்க முடியாத உடம்பின் கண்ணே உயிரைக் காவடித் தண்டாக வைத்து அதன் இரு முளைகளிலும் தொங்குகின்றன.

4. காமக் கடல்மன்னும் உண்டே அது நீங்தும்

ஏமப் புணைமன்னும் இல். l 164.

(ப-ரை) காமக்கடலே . காமமாகிய கடலே, உண்டு . என்னிடம் உண்டாகி இருக்கின்றது, அது - அந்தக் கடலினை, நீந்தும். நீந்திச் செல்லுகின்ற, ஏமப்புணை.பாது காப்பாகிய புணை 1தெப்பம்), இல் என்னிடம் இல்லை. யாகும். (மன், உம் - அசைநிலை)

(க-ரை காமமாகிய கடலே என்னிடம் உண்டா கின்றது. அந்தக் கடலினை நீந்திக் கடக்கின்ற பாதுகாப். பாகிற புணை இல்லாமல் இருக்கின்றேன்.