பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

493

5. துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு

கட்பினுள் ஆற்று பவர். Í j 65

|ப-ரை) நட்பினுள் - நட்பின் கண்ணே, துயர் . துன்பத்தின், வரவு - வரவினை, ஆற்றுபவர் . உண்டாக்கும் தலைவர், துப்பின் - பகைமையில், எவனாவர் எப்படிப் பட்டவராக இருப்பாரோ? (மன், கொல் . அசை)

|க-ரை இன் பத்தினைச் செய்தற்குரிய தட்பின் கண்ணே துன் பத்தினைச் செய்பவர், துன்பம் செய்வதற் கானபகைமையின் கண்ணே என்ன செய்வாரோ?

6. இன்பம் கடல்மற்றுக் காமம் அஃது.அடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது. I 166

(ப-ரை காமம் - காமமானது, இன்பம் - இன்பம் தரும் போது, கடல்-கடல்போலப் பெரிதாக இருக்கின்றது, மற்று - பிறகு, அஃது - அக்காமமும், அடுங்கால் தலைவன் பிரிவினால் துன்பம் உண்டாகும்போது, துன்பம் - அந்தத் துன்பமானது, அதனில் - அந்தக் கடலினையும் விட, பெரிது - பெரிதாக இருக்கின்றது.

(க-ரை காமம் இன்பம் செய்கின்றபோது அந்த இன்பம் கடல் போலப் பெரிதாக இருக்கின்றது. அந்தக் காமம் பிரிவினால் துன்பம் செய்யுங்கால் அத்துன்பம் கடலினை விடப் பெரிதாக இருக்கின்றது.

7. காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்

யாமத்தும் யானே உளேன். I 167

(ப-ரை) காமம் - காமமாகிய, கடும் கொடிய, புனல். வெள்ளத்தினை, நீந்தி - நீத்தியும், கரை - அதன் கரை யினை, காணேன் - காணமுடியவில்லை, யாமத்தும் . யாவரும் உறங்கும் பாதி இரவிலும், யானே உளேன் - யானே தனித்து இருக்கின்றேன்.