பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு $96 அதிகாரம் 97 மானம் 96. மிகவும் இன்றியமையாத சிறப்புகளை உடையனவாயினும் உயர்குடியில் பிறந்தவர் குடிப்பெருமைக்குத் தாழ்ச்சி வரும்படியான செயல்களைச் செய்யாமல் விடவேண்டும். 982 புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர்கள் புகழ் தேடும் வழியிலும் தம் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல் களைச் செய்யமாட்டார்கள். 93. செல்வச் செழிப்புள்ள காலத்தில் ஒருவனுக்குப் பணிவு வேண்டும் செல்வம் சுருங்கி வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும். 964 மக்கள் தம் உயர்வான நிலையை விட்டுத் தாழ்ந்த நிலையை அடையும்போது தலையிலிருந்து அகன்று விழுந்து தாழ்வுற்ற மயிரினைப்போல் இழிவு அடைவார்கள். 965. குடிப்பிறப்பால் குன்றுபோல் உயர்ந்த நிலையில் உள்ளவர்களும் தம் தாழ்வுக்குக் காரணமான செயல்களை ஒரு குன்றிமணி அளவு ச்ெய்தாலும் தாழ்ந்த நிலையை அடைவர். 986. தன்னை மதியாமல் இகழ்கின்றவர்களின் பின்சென்று. பணிந்து நிற்கும் நிலை ஒருவனுக்குப் புகழையும் தராது. மற்றும் தேவர் உலகிலும் கொண்டுபோய்ச் சேர்க்காது. அதனால் என்ன பயன்? 36.தன்னை இகழ்வாரின்யின்சென்றுபொருள்பெற்று அதனல் ஒருவன் வாழ்தலைவிட அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று செல்லப்படுதல் சிறந்தது. 88. ஒருவனுடைய பெருந்தகைமை அழியும் நிலையில், தான் இறந்து போகாமல் மானம் விட்டு உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை இறவாமைக்கு மருந்தோ? 98. தன் உடம்பிலிருந்து ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள் மானம் அழிய நேர்ந்தால் அப்பொழுதே உயிரை விட்டு விடுவர். - 90. தமக்கு யாதேனும் ஓர் இழிவு நேர்ந்தால் உயிரை விட்டுவிட்ட மானமுள்ளவரின் புகழ்விடிவினை எக்காலத்திலும் உலகத்தார் கைதொழுது போற்றித் துதிப்பார்கள.