பக்கம்:திருக்குறள் தெளிவு-7.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(மண-உாை) இல்வாழ்க்கை யாகிய நிலை பழியையும் அஞ்சிப் பகுத் துண்டலையும் உடைத்தாயின், தனதொழுங்கு இடையறுதல் எக்காலத் தினும் இல்லை. (பரி-உாை) பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி, அப் பொருளை இயல்புடைய மூவர் முதலாயினர்க்கும், தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலே ஒருவன் இல்வாழ்க்கை உடைத்தா யின், அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றலல்லது இறத்தல் இல்லை. (ஆாாய்ச்சி உாை) சிலர் இன்ைெருவருடைய பொருளை எடுத் துத் தம்முடையதுபோல வழங்குவார்கள். கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையார்க்கு உடைப்பது என்ருல் இதுதான்? இன்னும் சிலர், பிறரை வருத்திப் படாதபாடுபடுத்தி அவ ரிடம் உள்ள பொருளேப் பறித்து, கல்லவர்போலத் தாங்கள் வழங்குவார்கள். மாட்டைக் கொன்று செருப்புத்தானம் செய் வது என்ருல் இதுவேதான். இவ்விதம் பழிப்புக்கிடமான முறையில் பொருள் தேடிச் செய்பவை யெல்லாம் உண்மை யான உதவியாகா. ஆனல் பிறருடைய பொருளேக் கையாண்டு பலர்க்கும் பயன்படவும் செய்யலாம். அப்படிச் செய்யும் போது, பொருளுக்கு உரியவரின் வாழ்க்கைக்கு ஒரு தீங்கும் ஏற்படாதபடிப் பார்த்துக்கொள்ளவேண்டும். அஃதாவது, அன்னரின் தேவைக்கு மேற்பட்ட பகுதியையே பலர்க்கும் பயன்படுத்த வேண்டும். அதல்ை தப்பில்லே. ஒரு பொய், ஒருவர்க்கும் தீமை செய்யாமல், பலர்க்கு நன்மை செய்யுமே யால்ை அப்பொய்யும் மெய்யேயாம் என்னும் கருத்தில், " பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதிர்ந்த-நன்மை பயக் கும் எனின்" என்று ஒரு குறள் பின்னேரிடத்தில் உளதன்ருே? 5. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. (கோ) இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின், பண்பும் பயனும் அது. - (ப-ரை) இல்வாழ்க்கை-(ஒருவனுடைய) இல்லற வாழ்க் கையானது, அன்பும்— (யாவரிடத்தும்) அன்பினேயும், அறமும் -அறச் செயலினையும், உடைத்தாயின்-உடையதாய் இருக் குமேயானல், பண்பும்-(அவ்வில் வாழ்க்கையின்) இலக்கண மும், பயனும்-கன்மையும், அது- அந்த அன்பும் அறமும் உடைத்தா யிருக்கின்ற) அச் செயலே. (தெ-ாை) பண்பு என்ருல் இலக்கணம்; அஃதாவது தன்மை, இல்வாழ்க்கைக்கு இருக்க வேண்டிய இலக்கணம் அன்பும், அறமும் உடைமையே. இல்வாழ்க்கையின் பலனும் அந்த அன்பும் அறமும் உடையதாய் இருப்பதே. அன்பும், அறமும் இல்லாதவன் இனிமையாக இல்வாழ்க்கையை எப்படி கடத்த முடியும்? முடியாது. அதனலேயே அவ்விரண்டும்