பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அரசியல் 123 55. நேர்மையான ஆட்சி முறை எவரிடத்தும் நன்மை தீமைகளை ஆராய்ந்து பற்று காரணமாக இரக்கம் காட்டாமல் ஆணை செலுத்தி, எதையும் தேர்ந்து தீர்ப்பளிப்பதே செங்கோல் முறையாகும். 541 பொதுவாக உலகம் முழுவதும் மழையை எதிர்பார்த்து வாழும்; சிறப்பாகக் குடிமக்கள் அரசனது செங்கோல் ஆட்சியை எதிர்நோக்கி வாழ்வர். 542 அந்தணர் ஒதும் மறைநூலுக்கும் அறநெறிக்கும் ஆதரவாய் நிற்பது அரசனது செங்கோலே. 543 குடிமக்களைத் தழுவிக் காத்துச் செங்கோலாட்சி செலுத்தும் பெருநில வேந்தனது அடியைத் தழுவி உலகம் வாழும். 544 நீதி நெறிப்படி செங்கோல் ஆட்சி புரியும் மன்னனது நாட்டில் போதிய மழையும் நல்ல விளைச்சலும் ஒரு சேரக் காணப்படும். 5.45 அரசனுக்கு வெற்றியளிப்பது வேற்படை அன்று: அவனது செங்கோலே! அவ்வெற்றியும் செங்கோல் கோணாமல் ஆட்சி செலுத்தினால்தான். 5.46 உலகம் முழுவதையும் அரசன் காக்கிறான்; அவனையோ, அவன் முறை தவறாது ஆட்சி செய்யின் அந் நீதிமுறை காப்பாற்றும். 547 எளிய இயல்புடன் நன்கு ஆராய்ந்து நீதி வழங்காத வேந்தன் தாழ்ந்த அளவில் தானே கெட்டு விடுவான். 548 குடிமக்களைப் பிறர் அழிக்காமல் காத்துத் தானும் பேணி உதவி, குற்றம் கண்ட வழி ஒறுத்தல் அரசனுக்குப் பழியன்று: ஆட்சி முறையே. 549 கொலைத் தீர்ப்பினால் கொடியவரை அரசன் ஒறுத்து அழித்தல், பயிருக்கு இடையூறாக உள்ள களையை உழவர் களைவதற்கு ஒப்பாகும். 550