பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/209

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


208 பொருள் 98. பெருமை ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல். 971 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். 972 மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். 973 ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. 974 பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல். 975 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு. 976 இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கட் படின். 977 பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. 978 பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். 979 அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். 98O