பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் 51 20. பயனற்றவற்றைப் பேசாமை பலரும் வெறுக்குமாறு பயனற்ற மொழிகளைப் பேசுபவன் எல்லாராலும் இகழப்படுவான். 191 பயனற்ற பேச்சுக்களைப் பலர்முன் பேசுவது, இனிமையற்ற செயல்களை நண்பரிடையே செய்தலினும் தீயதாம். 192 ஒருவன் பயனில்லாத செய்திகளைப் பற்றிப் பலபட விரித்துப் பேசும் பேச்சு, அவன் நலமற்றவன் என்பதை எடுத்துக் காட்டும். 193 பலரிடையே பயன்சேராத பண்பில்லாத சொற்களைச் சொல்லுதல் இன்பமும் இல்லாமல் நன்மையினின்றும் நீங்கச் செய்யும். 194 நற்பண்புடையோர் பயனற்றவற்றைப் பேசின், அவருடைய சீரும் சிறப்பும் ஒரு சேர நீங்கும். 195 பயனில்லாத சொற்களைப் பெரிதுபடுத்திப் பேசுபவனை மாந்தன் என்று சொல்லற்க மாந்தருக்குள் ஒரு பதர் என்று சொல்லுக. 196 பெரியோர் நயப்பற்ற பேச்சுக்களைப் பேசினாலும் பேசுக ஆனால் பயனற்ற பேச்சுக்களை மட்டும் பேசாதிருத்தல் நன்று. 197 அடைதற்கரிய நற்பயனை ஆராய்ந்து நாடும் நல்லறிஞர், பெரிய பயனளிக்காத பேச்சுக்களைப் பேசார். 1 98 அறியாமை மயக்கத்தினின்றும் நீங்கிய குற்றமற்ற அறிவு பெற்றவர்கள், பயனற்ற மொழிகளை மறந்தும் மொழியார். 139 சொல்வதானால் பயன்தரும் சொற்களையே சொல்லுவீராக, சொற்களுக்குள் பயன்தராச் சொற்களைச் சொல்லவே வேண்டா. 2OO