பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


98 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 61. பெறும்அவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவறிந்த மக்கள்பேறு அல்ல பிற பொருள் விளக்கம்: பெறும் அவற்றுள் = இல்லற வாழ்க்கையில் பெறும் அத்தனை அனுபவப்பட்ட பயன்களிலும் யாம் அறிவது - நாம் அறிந்த மிகுந்த பயனானது அறிவறிந்த - ஐம்பொறி உணர்வு மிக்க மக்கட்பேறு = குழந்தைகளைப் பெறுவது தவிர அல்ல பிற இல்லை = வேறெதுவும் இல்லை. சொல் விளக்கம்: அறிவறிந்த = பொறியுணர்வு மிக்க, உரன் பேறு = நுகர்ச்சி. முற்கால உரை: ஒருவன் பெறும்பேறுகளுக்குள் அறிய வேண்டியவைகளை அறிந்த மக்கட்பேற்றை மதிக்க வேண்டும் என்பதாம். தற்கால உரை: ஒருவன் பெறக்கூடிய பேறுகளில் அறிவுடைய நல்ல குழந்தைகளைப் பெறுவதைவிட, சிறந்த பேறு வேறு எதுவும் இருக்க முடியாது. புதிய உரை: இல்லற வாழ்வில் ஐம்பொறி உணர்வு மிக்க குழந்தைகளைப் பெறுவதைத் தவிர, சிறந்த பேறு வேறெதுவும் இல்லை. விளக்கம்: குழந்தைகள் பெறுவது என்பது கல்வியில்லா கலவியின் இயற்கையே. வல்லமையுள்ள குடும்ப வாழ்வுக்கு வலிமையான மக்கள் செல்வம் போல் வெறெதுவும் இல்லை. எப்படிப்பட்ட குழந்தைகள் பெற வேண்டும் என்பதற்கு அறிவறிந்த என்கிறார் வள்ளுவர். ஐம்பொறி நுகர்ச்சி நிறையப் பெற்ற குழந்தை என்பது கூன், குருடு, செவிடு, ஊமை, பீடு இன்றி பிறப்பது என்பதாகும். ஊனமுற்ற குழந்தைகள் உள்ள இல்லம் உடலாலும் உணர்வாலும் மகிழ்வற்றுக் கிடப்பது கண்கூடு. அதனால்தான்