பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - - == - - o * 74. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎனும் நாடாச் சிறப்பு * பொருள் விளக்கம்: ஆர்வம் = பிறரிடத்துக் கொள்கிற கருணை உள்ளத்தை உடைமை = அந்த பண்பான உரிமையை, செல்வத்தை, அன்பு:ஈனும் = அன்பானது உண்டாக்கித் தருகிறது அது = அத்தகைய அன்புப் பண்பின் பெருக்கமானது நண்பு = உள்ளும் புறமும் பொருந்துகிற உறவை சிறப்பு மேன்மையான இன்பம் தரும் உயர்ச்சியை நாடா என்னும் = இணைத்துக்கட்டுகிற அணியாகவும் விளங்குகிறது. சொல் விளக்கம்: ஆர்வம் = தயை, கருணை, கொள்கிற பற்றுள்ளம் உடைமை = உரிமை, செல்வம்; நாடா = கட்டுதற்கு உதவும் அணிவகை; சிறப்பு = மேன்மை, இன்பம், உயர்ச்சி நண்பு = நட்பு, உறவு, சுற்றம் முற்கால உரை: அன்பானது ஆசையைத் தரும். அது சிநேகத்தையும் தரும். தற்கால உரை: பிறரிடம் காட்டும் அன்பு, நாளடைவில் நட்பாக மலரும் தன்மை உடையது. புதிய உரை: அன்பு பிறரிடம் கருணை உள்ளத்தை உண்டாக்குகிறது. அதன் பெருக்கம் உள்ளும் புறமும் பொருந்துகிற உறவு, இன்பந்தரும் உணர்ச்சியை இணைத்துக்கட்டும் அணியாகிறது. விளக்கம்: பிறரிடத்துக் கருணை மனத்தை உண்டாக்குகிற அன்பானது, அவர்களிடத்தில் உள்ளும் புறமும் பொருந்துகிற உறவையும், ᏧᎦ$ ᏞᏝ) fᎢ☾Ꭲ சுற்றுப் புறத்தை உருவாக்குகிற சுற்றத்தையும் ஏற்படுத்துகிற நாடாவாகாவும், கட்டுகிற அணியாகவும் உதவுகிறது. நான்காவது குறளில் உடல் மனம் உயிர் கொண்டு காட்டுகிற அன்பால், உயர்ந்த உறவும், சுகம் தரும் சுற்றமும், மேன்மை தரும் வாழ்வும் அமைகிறது என்று அன்பின் மேன்மையை விளக்கிக் காட்டுகிறார்.