பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I26 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 84. அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் பொருள் விளக்கம்: முகன் அமர்ந்து = முகத்தால் பொருந்தி நல்விருந்து = விருந்தினர்க்கு அதிகமான நன்மைகள் செய்து ஒம்புவான் = காப்பவன்; இல் = இடத்தில் (மனத்தில்) (செய் + ஆள்) செய்யாள் = செயல் ஆற்றலும் அழகும் உடைய வெற்றியாளராக்கி (ஆடவராக) அகனமர்ந்து - மனம் மகிழ்ச்சியுடன்; உறையும் = தங்கி வாழவைக்கும் சொல் விளக்கம்: நல் = நன்மை, அதிகமான; இல் = இடம், வீடு. செய் = செயல்; ஆள் - ஆடவர், வெற்றியாளர் செய்யாள் - அழகு, உறையும் = தங்கும் முற்கால உரை: விருந்தினரைக் காப்பவன் வீட்டில் இலக்குமி வாசம் பண்ணுவாள். தற்கால உரை: முகம் மலர்ச்சியுடன் விருந்தினரைப் போற்றுபவன் வீட்டில் எப்பொழுதும் செல்வம் கொழிக்கவே செய்யும். புதிய உரை: விருந்தினர்க்கு விருப்பத்துடன் அதிக நன்மைகளைச் செய்கிறவன் மனத்தில் ஆற்றலும் அழகும் வெற்றியும் விளைந்து மனம் மகிழ்ச்சி பெற வாழ்ந்திடும். விளக்கம்: செய்யாள் என்பதற்கு இலக்குமி என்பார்கள். இலக்குமி என்றால் அழகு என்றும் கூறலாம். இங்கே செய் + ஆள் என்று பிரித்திருக்கிறேன். செய் என்பதற்குச் செயல் = ஆள் என்பதற்கு அரசாள்கிற ஆடவர் என்று அர்த்தம். ஆடவர் என்றால் வெற்றியாளர். அரசாளுதல் என்பது அனைவரையும் ஆளுகிற ஆண்மை உடையவர். ஆகவே, இந்த நான்காம் குறளில் நல்விருந்து படைப்பவன் நானிலம் ஆளுகிற ஆற்றலாளனாக உயர முடியும் என்கிறார் வள்ளுவர்.