பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


130 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 88. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பார் விருந்தோம்பி வேள்வித் தலைப்படா தார். பொருள் விளக்கம்: விருந்தோம்பி விருந்தினரைக் கவனித்துக் காக்கும் வேள்வி - ஈகையையும் வணக்கத்தையும் உடைய செயலை தலைப்படாதார் = பெருமைப்பட்டு, அந்த ஒழுங்குடன் வாழ்கிறவர். பரிந்து = ஏற்றுக் கொண்ட தம் பணியைத் துணிந்து ஒம்பி = வளர்த்துக் கொண்டு; பற்று = தமது அன்பான இசைவை அற்றேம் - அப்படியே கொண்டு, பாதுகாப்பார் சொல் விளக்கம்: பரிந்து = ஏற்றுக் கொண்டு: ஒம்பி = வளர்த்து பற்று = ஆசை, அன்பு, இசைவு: அற்றேல் = அப்படியானால் தலைப்படல் = பெருமைப்படுதல்; தார் = ஒழுங்கு ; வேள்வி - ஈகை முற்கால உரை: விருந்தாளிகளைக் காப்பாற்றாதார் பொருளைக் காப்பாற்றி இழந்தோம் என்பார்கள். தற்கால உரை: விருந்தோம்பலைச் செய்து மகிழாதவர்கள், பயனில்லாமல் செல்வத்தை வைத் திருந்து அதனை இழக்கும்போதுதான் வருந்துவார்கள். புதிய உரை: விருந்தோம்பலில், வந்தவரை வணங்கி, ஈகைப் பண்புடன் தந்து வாழ்கிறவர், தாம் ஏற்றுக் கொண்டு தொடங்கிய பணியில் சிறந்த இசைவுடன் ஈடுபட்டு அப்படியே பாதுகாத்து வருவர். விளக்கம்: விருந்தோம்பலை ஒருநாள் செய்வது சிறப்பன்று; ஏற்றுக் கொண்ட பணியைத் தொடர்வதும் தொடர்வதில்துணிவதும், அதை இதயத்தால் இசைவதும், அப்படியே ஏற்றுக் கொள்வதும்தான் விருந்தோம்பலுக்குப் பெருமை சேர்க்கும். அத்தகைய அரிய பண்பாட்டை வளர்த்துக் கொள்வதே சிறந்த அறனின் சீர்மையாகும் என்று எட்டாவது குறளில் விருந்து படைப்பவருக்குரிய விரிந்த மனத்தையும் பரந்துபட்ட பாங்கையும் குறித்துக் காட்டுகிறார்.