பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - - - - mā ജ - 131. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் பொருள் விளக்கம்: ஒழுக்கம் = உடல் காக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் விழுப்பம் = மேன்மையும் நன்மையும் (மிகுதியாகப்) பெற தரலான் = ஆசையைத் தூண்டுதலால் ஒழுக்கம் = அந்தப் பேரெழுச்சியை உயிரினும் = உயிர்காக்கும் சுவாச ஒருமையால் ஒம்பப்படும் = வளர்க்க அவ்வனம் மேம்படும். சொல் விளக்கம்: ஒழுக்கம் = நன்னடத்தை, விருத்தி, விதித்த கடமை வழுவாது விழுப்பம்= ஆசை, நன்மை, மேன்மை, சிறப்பு ஒம்புதல் = மனத்தை ஒருப்படுத்துதல் உயிர் = மூச்சு, சுவாசம், காற்று. முற்கால உரை: ஒழுக்கம் சிறப்பைத் தருதலான் அவ்வொழுக்கம் உயிரினும் மேலானது ஆகும். தற்கால உரை: ஒழுக்கம் ஒருவருக்கு மேன்மை தருவதால் அந்த ஒழுக்கமே உயிரைக் காட்டிலும் மிகச் சிறந்ததாகப் போற்றிக் காக்காப்படும். புதிய உரை: உடல் காக்கும் நல்ல பழக்கங்கள் தருகிற நன்மையைக் கண்டு, மேன்மை ஆசை வளர்வதால், அந்த எழுச்சியைச் சுவாசிப்பது போல் ஒருமனத்துடன் காப்பது தான் சிறந்த ஒழுக்கம் ஆகும். விளக்கம்: ஒழுக்கமான செயல்கள், உடல் உறுப்புக்களால் உடலுக்காகச் செய்யப்படுகின்றன. உடல் நலம், பலம் பெறுகிறபோது அதன் மேல் விருப்பம் ஏற்படுவதும், அதிலே வேட்கை மிகுவதும் இயற்கையே. அந்த ஒழுக்க எழுச்சியை, எப்படித் தொடர வேண்டும் என்றால், மன ஒருமைப்பாட்டுடன். அதைத்தான் ஒம்புதல் என்றனர். எதைத் தொடரவேண்டும் என்றால், சுவாசத்தை. சுவாசத்தை ஒழுங்காகத் தொடர்ந்தால்தான் உயிர் நிலைக்கும். தெளிவான, திட்பமான, தீர்க்கமான சுவாசப் பயிற்சி வேண்டும். ஒழுக்கம் என்பது உயிரின் செயல். உடல் காக்கும் ஒழுக்கம், உயிர் காக்கும் முழக்கம் போல அமைய வேண்டும் என்று முத்தாய்ப்பாக முதல் குறளில் தொடங்குகிறார்.