பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா இங்கே குருவின் ஞான வழியில் இரண்டறக் கலந்து விடுதல் என்ற பொருள் கிடைக்கிறது. - அல்லால் என்பது அல் + ஆல் என்று பிரிகிறது. அல் என்றால் இருள் என்றும், மயக்கம் என்றும் பொருள். ஆல் என்றால் நஞ்சு, வெள்ளம், அதிசயம் என்று பொருள். கவலை என்பது க+வலை என்று பிரிகிறது. வலை என்றால் வளைத்துப் போடுதலாகும். க என்றால் காற்று, நெருப்பு, நீர், வியாதி, எமன், காமன் என்று பல பொருள். மனத்திலே இயற்கையும் செயற்கையுமானதுன்பங்கள், நோய் போலப் பற்றிக் கொண்டும் தொற்றிக் கொண்டும் படர்கின்றன. தொடர்கின்றன. இன்ப வாழ்வை இடர்கின்றன. இப்படிப்பட்ட நோய்களை மாற்றல் என்றால் தீர்த்தல் முடியும். அதைக் குறிக்கத்தான் அரிது என்றார் வள்ளுவர். அரிது என்றால் அருமையானது. அருமை என்றால் பெருமை, சிறப்பு, மேன்மை என்று அர்த்தம். ஆக, மோன குருவின் ஞானவழியில் சென்று சேர்ந்தார்க்கு இருளும் மயக்கமும் அதிசயமான நச்சுத்தன்மையும் கொண்ட மனத்துன்பங்களைத் தீர்த்து சிறப்புப் பெற முடியும். மேன்மை பெற முடியும் என்னும் கருத்தையே இங்கே வள்ளுவர் தெளிவாக்குகிறார். இந்த 7வது குறளில் மோன குருவின் வழி காட்டுதல் இருக்கும் போது, மாறாத புயலாக வீசும் மனக் கவலையையும் மாற்றி விட முடியும் என்பதை வலியுறுத்துகிறார். இது அகத் துன்பம் புறத் துன்பம் இரண்டுக்கும் விடிவுகள் உண்டு என்பதனைச் சிறப்பாக விளக்குகிறது. 8. அற ஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிற ஆழி நீந்தல் அரிது. பொருள் விளக்கம்: ಆಣ್ಣ தெளிவுடனும் செவ்வையுடனும் முற்ற முழுதுமாகத் தகுதி, ஞானம், தவம், ஒழுக்கம் அனைத்துக்கும் ஆழி அந்தணன் = கட்டளையிடுகிற வல்லமை பெற்ற கருணையாளன், தண்ணளியாளனாகிய குருவின் தாள் சேர்ந்தார்க்கு = ஞானத்தை நிரம்பப் பெற்ற அவரது பெருமை வழியைப் பின்பற்றுவோர்க்கு == அல்லால் = மயக்கமும், அச்சமும், அதிசயமும், நச்சுத் தன்மையும் 2–6ðD L– LL/ பிற ஆழி - துன்பக் கடலாக விளங்கும் துயர்களை எல்லாம்