பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/298

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 297 விளக்கம்: காதலன் என்னும் ஓர் அருமையான சொல்லை வள்ளுவர் இக்குறளில் வைத்துள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, இந்தச் சொல் எத்துணை சிறந்த பொருளைத் தந்து, எவ்வளவு சிறப்பான பெருமையைப் பெற்றிருந்தது என்பதற்கு இந்தச் சொல்லே சான்றாக விளங்குகிறது. காதலன் என்றால் ஒரு பெண்ணை விரும்புகிறவன், விரும்பிக் கொண்டிருக்கிறவன் என்று இப்போதைய பொருளாக இருந்தாலும், இதன் நுண்மையான பொருள், நெஞ்சைத் தொடும் வண்ணம் அமைந்திருக்கிறது. தலைவன், அன்பன், சிநேகிதன், தோழன் என்றெல்லாம் கூறும் போது, ஒரு பெண்ணுக்கு என்று கூறுவது இந்நாளைய பண்பாடாகிவிட்டது. - ஆனால், வள்ளுவர் சொல்ல வந்த நுண்மை - ஒருவன் தன் தேகத்திற்குத் தலைவனாக விளங்கவேண்டும். ஏன்? தேகத்தில் தானே திரிந்தலைந்து துன்புறுத்தும் ஐம்பொறிகள் இருக்கின்றன! அவன் தேகத்திற்கு அன்பனாக விளங்கவேண்டும்! ஏன்? அப்போதுதான் தேகத்தை திறமையுள்ளதாகப் பேணிக் காக்க முடியும். ேேதகத்திற்கு ஏன் தோழனாக இருக்கவேண்டும்? தவறு செய்கிறபோது, தவறுசெய்ய முயல்கிற போது, தட்டிக்கேட்டு, தடுத்து, தடைசெய்து தவறுகள் தம்பக்கம் வராது எல்லை போட்டு, இடர் நேரா வண்ணம் காப்பவன் தோழன். அதனால்தான் தேகத்திற்குத் தோழனாக, அன்பனாக, தலைவனாக ஒருவன் இருக்க வேண்டுமென்றால், அவன் மிகவும் விழிப்போடு எச்சரிக்கையுடன் வாழ வேண்டும். தீமைகள் பக்கம் ஒருவன் செல்கிறான் என்றால், அவன் பலவீனப்பட்டு, பாவம் செய்ய முனைந்து முன்னேறுகிறவன். வள்ளுவரோ, தீமைகளை, தீய வினைகளை, தம் பக்கம் வர விடாமல் விரட்டியடிக்க வேண்டும், என்ற வைராக்ய வாழ்வை உடையவராக வாழ்பவனே தலைவனாக வரமுடியும் என்கிறார். தீமையின் பக்கம் நெருங்காமல் இருப்பதைவிட, தீமைகளைத் தன்பக்கம் நெருங்கவிடாமல் விரட்டியடிக்கின்ற