பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/365

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


364 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 241. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. பொருள் விளக்கம்: அருட் செல்வம் - கருணை மிகுந்த வாழ்க்கையானது செல்வத்துள் செல்வம் - செழிப்பு மிகுந்த செல்வத்திற்குள்ளே ஆக்கம் மிகுந்தது பொருள் செல்வம் - நல்ல உடல் உடைய வாழ்கையானது பூரியார் கண்ணும் இழிந்தவர் உடலிலும் உள - இருக்கிறது (பயன்தராமல்) சொல் விளக்கம்: அருள் = கருணை, நல்வினை, தயவு, இரக்கம் செல்வம் - செழிப்பு, ஆக்கம், வாழ்க்கை, கல்வி, பொருள் பொருள் = உடல், பொன்; பூரியார் = கீழ்மக்கள் கண் - உடம்பு, உள - மெய்ம்மை. முற்கால உரை: செல்வங்கள் பலவற்றுள் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமானது அருளால் வரும் செல்வம். அஃதொழிந்த பொருளான் வரும் செல்வங்கள் இழிந்தார் கண்ணும் உளவாம். தற்கால உரை: உலகத்துச் செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்த செல்வமாவது, அருட் செல்வமே. மற்றை பொருட்செல்வங்கள் அருளற்ற 院G ழாரி டத்தும் உள்ளன. = புதிய உரை: வாழ்க்கையிலே சிறந்த செழிப்புள்ள வாழ்க்கை, கருணை மிகுந்த வாழ்க்கையே. நல்ல உடல் வளம் கொண்டிருப்பவர் வாழ்க்கையே, சிறந்த வாழ்க்கை என்றாலும், இழிந்த கீழ் மக்களிடமும் வளமான உடல் இருந்தும், அருள் வாழ்க்கை இல்லாமல் போவது உண்மைதான். விளக்கம்: துறவறத்தைப் பற்றி திறந்த மனத்துடன் பேச வந்த வள்ளுவர், துறவறநெறிக்குத் துணை நிற்பது, செல்வமல்ல. திறமான தேகம் தான் என்னும் உண்மையைத் தெரிந்து வைத்துக் கொண்டு, மக்களின் மனநிலையைத் தெரிந்து கொள்வதற்காகவே,