பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/368

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 367 வறுமையைத் தீர்க்கும் வைத்தியரான அருளாளருக்கு, நாடிச் செல்லத் தெரியவேண்டும். நாடி ஆராய்ந்து, கண்டறிந்து, அவருக்கு வேண்டிய தேவைகளை வழங்குக. அவரது இல்லாமையை விரட்டி, அவர் இதயத்தை ஆள்க. அன்பில் வாழ்க என்று வள்ளுவர் வழிகாட்டுகிறார். எப்படி முயன்றாலும், எப்படி ஆராய்ந்து வழிகளைக் கண்டு பிடித்தாலும், தேவையானவர்களைத் தேடிப் பிடித்து உதவுவது அருளுக்கு எப்போதும் துணையாக அமையும். தேரிய என்னும் சொல்லுக்கு கொள்ள என்பது பொருள். பல வழிகளை மேற்கொண்டாலும். அதுதான் துணை, அந்த அருள்தான் துணை. துறவுக்கு அருள்தான் துணையாகும். பணமும் பதவியும் அல்ல. அவை பைசாச வெறிகளை ஏற்படுத்தும். மனிதர்களைப் புரிந்து கொள்ள, அவர்களின் மனங்களை ஆண்டு, அறநெறியால் செலுத்த, தேடிப்பிடித்து, வலுவற்ற மனிதர்களுக்கு, வலுவூட்டுங்கள். வல்லமை உடலுக்கு வந்துவிட்டால், வறிய எண்ணங்கள் மாய்ந்துவிட்டால், நெறிக்குள் செலுத்தி அமைதியை நிலை நாட்டலாம். உதவுதல் உள்ளத்தைப் பண்படுத்தும் என்பதால், தேடிப்பிடித்து, நாடியறிந்து, நன்மை செய்யுங்கள் என்று 2வது குறளில் வள்ளுவர் கூறுகின்றார். 243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல் பொருள் விளக்கம்: இருள்சேர்ந்த = அஞ்ஞானமும் ஆணவமும் கொண்ட இன்னா = வெறுப்புடன் இகழ்கின்ற மக்களை, புகல் = வெற்றிகாணும் உடல் வளம் கொண்டிருப்பதால், அருள் சேர்ந்த = கருணை நிறைந்த நெஞ்சினார்க்கு = மனச்சாட்சி உள்ளவர்க்கு (வெற்றியே தவிர) இல்லை = சாதல் இல்லை. நிலைத்து வாழ்வார்.