பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/394

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 393 தற்கால உரை: புலால் உண்ணாமையை உறுதியாகக் கொண்ட உடலே உயிர் நின்ற உடல். சேற்றுக் குழி கூட, புலால் உண்ணத் தன் பெருவாயைத் திறத்தல் இல்லை. புதிய உரை: ஊன் உண்ணாமல் வாழ்கிற உடலில்தான், மெய்யான ஆத்மா நிறைவாக வாழ்கிறது. பிற உடலைக் கொன்று தின்னுபவர்கள் வாழ்க்கை, குழப்பம் கூடிய நரக வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. விளக்கம்: உள் + அது + உயிர்நிலை. ஆன்மா, அது வாழ்கிற உடல், ஊன் உண்ணாது சீவிக்கிறபோது தான், நிறைவான ஆத்மாவாக, நிறைந்த நிம்மதியான வாழ்வை வழங்குகிறது. ஆனால் பொதுவாக மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள்? ஊன் சோற்றைத்தான் உயிராக நினைக்கின்றார்கள். அப்படி உண்பதையே, தனது வாழ்க்கை நெறியாகவும், பிறப்புரிமை யாகவும் கருதுகின்றார்கள். பெருமையாகப் பேசுகின்றார்கள். பேரின்பம் கொள்கின்றார்கள். அப்படிப்பட்டவரை வள்ளுவர் எப்படி வெளிப்படுத்து கிறார் பாருங்கள். அண்ணாத்தல் என்ற சொல்லால் அவர்களை அடையாளம் காட்டுகிறார். ஊன் உண்ணுவதற்காக, உடலை வருத்தி அலைகின்றார்கள். வாய் பிளந்து திரிகின்றார்கள். கொட்டாவி விட்டுக் கொண்டு, ஏங்கிக் கிடக்கின்றார்கள் என்கிறார் வள்ளுவர். அப்படி அலைந்து திரிந்து ஊணுண்டவர்கள் வாழ்க்கை எப்படி அமைகிறது? அந்த வாழும் நிலையை அளறு என்கிறார். அளறு என்றால் குழைசேறு. குழப்பம், நரகம். எந்தப் பயிரும் விளையாத ஒரு பாழிடம், பயன்தராத நிலம்தான் சேற்றுப்பகுதி. அதுபோலத், தெளிவில்லாத மன நிலையைத் தந்து கொடிய சூழ்நிலையால் குடியிருக்க வைப்பது குழப்பம். தீ அகமாக இருக்கும் அகத்தைத் தீயகமாக மாற்றிவிடும் நிலை. தீயகம் என்றால் நரகம் என்று அர்த்தம்.