பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/395

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


394 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ஆக, உடலைத் தீயகமாக மாற்றி, உருக்கிவிட்டு, உலா வைத்து, உதவாமல் செய்கிற உபத்திரவங்களை உண்டுபண்ணி, வாழ்வை அழித்து விடுகின்ற நிலையைத்தான், வள்ளுவர் அளறு என்றார். ஊன் உண்ண வேண்டும் என்று எண்ணும்போதே, அலறி ஒடவேண்டும் என்று வள்ளுவர் நினைத்தாரோ என்னவோ, அதை மிகவும் அச்ச மூட்டும் வகையில் அளறு என்றார். ஊன் உண்ணும் உடலில் உள்ள ஆத்மா, அல்லல் படும் என்ற உண்மையை 5 வது குறளில், மிக அருமையாக விளக்கியுள்ளார். 256. தினற்பொருட்டால் கொள்ளாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். பொருள் விளக்கம்: உலகு = ஒழுக்கம் சார்ந்த உயர்ந்தோர் கொள்ளாது எனின் = தமது மனதுக்குப் பிடிக்க வில்லை , ஊன் எமக்குப் (பகை என்று கூறியபிறகு) தினற் பொருட்டு = தின்பதற்காகவும் விலைப் பொருட்டு - விற்கும் பொருட்டும் ஆல் ஆல் - ஆலகால விடம் போன்ற ஊன் தருவார் = புலாலைத் தருபவர்கள் யாரும் இல் = யாருமே இருக்க மாட்டார்கள். வரவும் மாட்டார்கள் - சொல் விளக்கம்: கொள்ளாது மனதுக்குப் பிடிக்காமை; உலகு ஒழுக்கம், உயர்ந்தோர்; ஆல் நஞ்சு; பொருட்டு = காரணம். முற்கால உரை: தின்னுதல் காரணமாக, உலகத்தார் கொள்ளாராயின், விலைப்பொருள் காரணமாக, ஊனை விற்பவர் எவரும் இல்லை. தற்கால உரை: தின்னும் பொருளாகப் புலாலை உலகினர் வாங்கிக் கொள்ள மாட்டார் என்றால், அப் பொருளை விற்பனைப் பொருளாகத் தருவார் எவரும் இாார்.