பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/417

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


116 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ஆனந்தம் பெற, ஆன்மாவுக்கான காயெம் என்று கூற வந்த வள்ளுவர், மிக அழகாகத் தம் + கருமம் என்றார். தன் என்றால் ஆத்மா தம் என்றால் ஆத்மாக்கள். அதாவது ஆன்மாக்கள். ஆன்மாக்களின் அரிய சக்திக்காக, உயிர் படும் வேதனைகள் பனிரெண்டையும், பக்குவமாகப் பொறுத்துக் கொள்கின்றார்கள். அனல், சீதம், இடி, புனல், வாதம், ஆயுதம், நஞ்சு, மருந்து, பசி, தாகம், பிணி, பழி, உணர்ச்சி எனும் பனிரெண்டும் உயிருக்கு வேதனை தந்து, மனத்தைக் கலைத்து, உடலைச் சிதைத்து விடுவனவாகும். ஆனால், தவம் செய்யும் பக்குவர்கள், வேதனைகளை வென்று வலிமையாளர்களாக மாறி விடுகின்றார்கள். அதனால்தான், அற்புதவான்களை வள்ளுவர் தவம் செய்வார் என்றார். அத்தகைய கடன்களை ஆற்றாதாரை அல்லார் என்றார். ஆமாம் தீயவர்கள். பொய்வேடம் பூண்ட பேயர்கள். வாயொன்று சொல்லி மனமொன்று சிந்தித்து, இழிவான செயல் செய்யும் இழிஞர்கள். அப்படிப் பட்டவர்கள் ஆசைகளுக்கு அடிமையாகி, துறவிகளுக்கேயுரிய பண்புகள் சிறிதுமில்லாமல், பிறரைக் கோபித்தல், நட்புறவு பாவித்தல், பயன் கருதி வேண்டியதைச் செய்தல், முனைந்து தின்றல், சுவைத்தல், தீமை செய்தல், பிறரை முறையின்றி தாழ்த்தல், உயர்த்துதல், தற்பெருமை பேசுதல் போன்ற எல்லா தீய குணங்களையும் கொண்டிருப்பதால்தான், அவர்களை அல்லார் என்றார். அவம் என்றார். அவர்கள் சத்திரத்து நாய்கள் போலக் கத்தித் திரிவர். குரங்குபோலத் தாவும் மனம் கொண்டதனால், கழுகுபோலப் பிறரைக் கொத்தித் திரிவர். ஆகவே, அவர்கள் புன் ஞானத்தார், ஞானமில்லாமல் தவவேடம் பூண்டு, அவத்திற்கு ஆளாகி, அழிகின்றார்கள். ஆகவேதான், கடுமையாகப் பட்டு என்று கூறியிருக்கிறார். 267. சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. பொருள் விளக்கம்: சுடச் சுடரும் = தீயிலிட்டு சுடுகிறபோது பிரகாசிக்கிற பொன்போல - தங்கம்போல