பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 439 தற்கால உரை: மனத்தின் கண் குற்றம் நீங்காமல் படிந்திருக்கத் தவத்தினர்போல், தூய நீராடல் முதலியவற்றால், தம்மைப் பொலிவாகக் காட்டிக் கரவாக வாழ்கின்ற வேடமாந்தரும் உலகில் பலராவார். புதிய உரை: நீரும் காற்றும் தெரிந்தும் மறைந்தும் ஒழுகி உதவுவதுபோல, மாந்தர்கள் ஒழுகி, மனதிலுள்ள மாசுகளைப் போக்கி விட்டால், அவர்கள் இந்த உலகின் மாட்சிமை மிக்கப் படையினராக விளங்குகின்றார்கள். விளக்கம்: மாண்டார் என்பது பெரியோர். மாந்தராக விளங்குபவர் சிந்திக்கின்ற மனிதராக மாறுவதுதான் மரியாதைக்குரிய வளர்ச்சி. மனிதரையும் மாண் + தார் ஆக, அதாவது மாண்பும் மாட்சிமையும் மிக்கப் படையாக மாற்றுவது என்பது மகத்தான சாதனை.

உலக வாழ்க்கையை உள்ளத்தால் துறந்து, உடலால் மறந்து, உயர்ந்த வாழ்வில் புகுந்து பெருமை பெறுவது துறவறத்தின் சிறப்பம்சமாகும். இதற்கு இயற்கை உதவுகிற அற்புதத்தைத் தான் இந்தக் குறளில் வள்ளுவர் காட்டியுள்ளார். நீர், காற்று, வெப்பம். இந்த மூன்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிற மாந்தரே, மாண்டோர் ஆகிறார். நீர் தொடர்ந்து, இடை விடாமல் ஒழுகுவதைக் குறிக்க ஒழுகு என்றும்; காற்று மறைந்து ஒழுகுவதை மறைந்து என்றும் வள்ளுவர் கூறியது, அவர் வல்லமையைக் காட்டுகிறது. நீரோட்டம் போல, மறைந்து உதவும் காற்றை, பிடித்துப் பயன்படுத்தும் கணக்கறிவாளராக ஒருவர் முயல்கிறபோது, கூற்றையும் உதைத்து விரட்டும் வலிமையைப் பெற்று விடுகிறார். நீராடி மறைந்தொழுகு என்று மனப் பயிற்சியின் பெருமையை வெளிப்படுத்திய வள்ளுவர், அப்படிப்பட்டவர் மனத்திலே உள்ள மாசுகளும் ஆசைகளும் 'சாக’ என்றார். மாசாக என்றார். மனத்திலே சலனங்களும் சபலங்களும் சாகின்றபோது, அவர்கள் மாண்பு மிக்கவர்களாக மாறிப் போகின்றார்கள், மாண்-மாண்பு; தார் = படை. அவர்கள் மாண்புமிகு படையினர். மாநிலம் காக்கும் மாவீரர்கள்.