பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை D வேறு. கல்வி அறிவிற் சிறந்திருப்பது வேறு. இாண்டும் இணக்கமில்லாத வேறாக இருக்கின்றன. விளக்கம்: உலகமானது ஒன்றிலிருந்து ஒன்று உருவானது. ஒன்றில் ஒன்று அணைத்துக்கொண்டும், ஒன்றின் ஒன்றாகத் தழைத்துக் கொண்டும், ஒன்றுக்கு ஒன்று உதவி வடிவாகி, முடிவில்லாமல் முதிர்ந்து, அழிவில்லாமல் கிளர்ந்தும் வருவதால், இந்த உலகத்தில் இரண்டு அரியவைகள் இணக்கமாக இருப்பதில்லை. அதனதன் தனித்தன்மையின் ஆணிவேரை வைத்துக் கொண்டுதான் ஆட்டம் போடுகின்றன. இரண்டும் இணங்கினால் முரண்டு பிடிக்கிற வேறுபாடுகளும் முனைந்து போகும். ஆனால் இரண்டும் இணைந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்த வள்ளுவர், கல்வி வேறாக இருக்கிறதே, நல்வினை வேறாக இருக்கிறதே; நல்வினையும் கல்வியும் ஒன்றிணைந்தால் வாழ்க்கையின் பாக்கியம் எப்படியும் உயர்ந்துவிடுமே என்கிற கருத்தை, ஊன்று கோலாக்கி, எழுந்து உயர்ந்து நிற்கிறார் வள்ளுவர் இந்தக் குறளில். 375. நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு பொருள் விளக்கம்: செல்வம் - சொர்க்கம் போன்ற வாழ்க்கை செயற்கு = வாழ்க்கையே வேண்டுமென்று அவாவுவோர்க்கு நல்லவை எல்லாம் - நல்லோர் சபை எல்லாம் தீயவாம் = தீய கூட்டமாகத் தெரியும் தீயவும் - தீமைசெய்கிற கூட்டமெல்லாம் நல்லவாம் - நல்ல உறவாகத் தெரியும் சொல் விளக்கம்: நல் அவை - நல்லவர்கள் சபை, தீயவை - தீயோர் கூட்டம் செல்வம் - சொர்க்க வாழ்க்கை முற்கால உரை: செல்வத்தை ஆக்குதற்கு நல்லவையெல்லாம் தீயவாய் அழிக்கும். அதுவேயன்றி தீயவைதாமும் நல்லவாய் ஆக்கும் ஊழ்வயத்தான். தற்கால உரை: செல்வம் தேடும்போது, முறைமை சூழலுக்கு ஏற்ப நல்லவை தீமைதரும். தீயவை நம்மை தரும்.