பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/586

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. 555 அறிஞர்களின் அன்பான கவனத்திற்கு இதுவரை வெளிவராத புது உரையை எழுதுவதற்காக... திருக்குறளில் உள்ள அதிகார வரிசையை மாற்றாமல் அப்படியே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன். புதிய பொருள் கூற வேண்டும் என்பதற்காக. எந்த ஒரு சொல்லையும், எங்கேயும் புதிதாகச் சேர்க்கவில்லை. எந்த இடத்திலும், எந்த ஒரு சொல்லையும் நீக்கிக் குறைக்கவில்லை. எதற்காக இந்த உரை வந்திருக்கிறது என்பதற்கான விளக்கத்தை அந்தந்தக் குறளுக்குக் கீழே தந்திருக்கிறேன். எல்லோருக்கும் எளிதில் விளங்கும் வண்ணம் புதிய உரையை எளிய இனிய தமிழில் தந்திருக்கிறேன். என் புதிய உரை உங்களை மகிழ்விக்கும்.