பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 61 விளக்கம்: மறம் செய்வதால் வாழ்வுக்கு வளமும் வராது, நலமும் தராது. அதுபோலவே அறம் செய்வதால் வாழ்வுக்கு எந்தக் கேடும் வராது. பாடும் நேராது. வள்ளுவர் இந்தக் கருத்தை நேரடியாகச் சொல்லாமல் மறை மொழியாக நிறை வழியில் நவின்றிருக்கிறார். அறம் செய்வதால், அறவழி நடப்பதால் உடலுக்குக் கேடு இல்லை. வாழ்வுக்குப் பாடு இல்லை. அதனால் அதற்கு ஈடு இல்லை. மறம் செய்வதால் ஆக்கம் வரும். ஏக்கம் தீரும். வாழ்வு உயர்ச்சி கொள்வது போலத் தோன்றும். ஆனால் அவை எல்லாம் வந்தாலும் அது ஆக்கம் அல்ல. உடலால் கேடு அடைவர். உணர்வால் பீடு அழிவர். வாழ்க்கையிலும் வீடு பெற மாட்டார். 2வது குறளில் அறன் எதையும் எதிர்பாராமல் அறவழியில் வாழ்வை நடத்த வேண்டும். அந்த வேட்கையுடன் செயல்களைச் செலுத்த வேண்டும். உடலை வலுப்படுத்தி வாழ வேண்டும் என்று கூறுகிறார்.

33. ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் பொருள் விளக்கம்: ஒல்லும் (உடலும் உள்ளமும்) பொருந்துகிற, உடன்படுகிற வகையால் - (காரண காரியம் உணர்ந்த) வழி வகையால் அறவினை = அறக்காரியங்களை ஆற்றுக செல்லும் வாய் எல்லாம் உள்ளம் அலைக் கழிக்கிற வழியில் @Tóv) @fTLD; செயல் = செய்கின்ற செயல்களில் ஈடுபட ஒவாதே = இசையாதே (வருந்தாதே) சொல் விளக்கம்: ஒல்லு பொருந்துதல், இணங்குதல், உடன்படுதல், நிறைவேற்றுதல்; ஒவுதல் = இசைதல், வருந்துதல். முற்கால உரை: தத்தமக்கு இயலுந் தரத்தான் அறமாகிய நல் வினையை ஒழியாதே அ ஃதெய்தும் இடத்தானெல்லாம் செய்க.