பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை - 89 விளக்கம்: இல்லாளின் தலையான மாண்பு வலிமையும் அழகும். அந்த மாண்பு இல்லாது போனால், உடல் வலிமையின்மையால், இல்லத்தின் பெருமையைப் பேணிக் காக்க முடியாமல் போகிறாள். அது பகைவரும் வந்து பாழாக்க நிற்கிற தாழ்ந்த வாயிலாக, அந்த இல்லம் ஆகிவிடுகிறது. இல்லத்தை ஆள்பவள்தான் இல்லாள். ஆள்வதற்குச் சக்தியும் ஞானமும் வேண்டும். அந்த மாட்சிமை இல்லாமல் இருக்கிற இல்லவள் வாசல், உள்ளவர்கள் மறைந்துபோக, பகைவர்கள் முற்றுகையிடும் கீழ்மை இடமாக மாறிவிடுகிறது. ஆக்குவதும் பெண்; அழிப்பதும் பெண்தானே. 54. பெண்ணின் பெருத்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் பொருள் விளக்கம்: கற்பு என்னும் = (இல்லற ஒழுக்கம் காக்கும்) ஒருமையுடைமை என்கிற திண்மை = வலிமையை உண்டாகப்பெறின் = மிகுதியாகப் பெற்றிருக்கும்போது பெண்ணின் = ஒரு பெண்ணுக்குரிய பெருந்தக்க = பெற்றிருக்கும் பேறுகளில் யாவுள' = இதைவிடச் சிறந்தவை எதுவுமே இல்லை சொல் விளக்கம்: கற்பு = ஒருமையுடைமை உண்டாகப் பெறின் = மிகுதியாகப் பெற்றால் முற்கால உரை: ஒருவர் பெறும் பேறுகளுக்குள் கற்புடைய மனைவியைப் பார்க்கிலும் எவை இருக்கின்றன? தற்கால உரை: கற்பு என்னும் மன உறுதியைக் கொண்ட மனைவியை விட, ஒருவனுக்கு மேம்பட்ட பொருள்கள் வேறு எவையும் இல்லை. புதிய உரை: கற்பைக் காக்கும் மன ஒருமையும் உடல் சக்தித் திண்மையும் மதில்போல அமையப் பெற்ற பெண்ணுக்கு அவள் பெற்றிருக்கும் பேறுகளுள் அதுவே பெரும் சிறப்பாக விளங்குகிறது.