பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

திருக்குறள் புதைபொருள்

என்பதை 'சினம் இனத்தைச் சுடும்' என்ற சொற்கள் நமக்கு நன்றாக அறிவிக்கின்றன.

'சினம் இனத்தைச் சுடும்' என்று வள்ளுவர் அழுத்திக் கூறுவதிலிருந்து, அன்பு இனத்தைத் தழுவும் என்பதை அவர் கூறாமற் கூறுவதாகக் கொள்ளவேண்டும்.

இனத்தைச் சுடுவது மக்கள் பண்புமல்ல; மரத்தின் பண்புமல்ல. மரம் மரத்தையும், மக்கள் மக்களையும் சுட்டுத் தொலைப்பதில்லை. ஆனால் நெருப்பேறிய மரங்கள் இனத்தைச் சுட்டழிப்பதுபோல, சினம் ஏறிய மக்களும் தம் இனத்தைச் சுட்டழிப்பர் என்று இக் குறள் கூறுவது வியக்கக்கூடியதாகும்.

"இன்பத் தெப்பமாயிருப்பினும் சரி, அதிலுள்ள மரம் தன் இனமாயிருப்பினும் சரி, சிறிதும் சிந்தியாமல் நெருப்பேறிய மரங்கள் சுட்டுத் தீர்ப்பதுபோல, சினம் ஏறிய மக்களும் இனமென்றும் நல்லோர் என்றும் கருதாமல் வதைத்துத் தீய்த்துவிடுவர்" என்று இக் குறள் கூறி, அபாயத்தைக் காட்டி எச்சரித்தாலும், உவமை நயம் காட்டி நம்மை மகிழவைக்கிறது.

சுடுகின்ற செயல் நெருங்கி நடைபெறுவது ஆதலின் 'சுடும்' என்ற சொல்லுக்கு இனத்தார் விலகிப் போய் விடுவர் என்று பொருள் காண்பதைவிட "இனத்தார் நெருங்கி நின்றே பகைத்துக் கொண்டிருப்பர்" என்று பொருள் காண்பது நயமாகத் தோன்றுகிறது.

இல்லறத்தாரை மட்டுமல்ல, துறவறத்தாரையும் இச்சினம் பற்றுமானால், அது அவருடைய தவத்தையும் அழித்து, பிறவிக்கடலைக் கடக்க உதவுகின்ற பேரின்பத் தெப்பத்தையும் அழித்துவிடும் என்பதை இக் குறளால் அறியலாம்.

தீப்பற்றிய மரங்களைத் தன்னினம் என்று கருதி இரக்க மனம்படைத்து ஏற்றிச் செல்லும் தெப்பமானது தானே அழிவதைப்போல், சினம் கொண்ட மக்களை இனம் என்று கருதித் தன்னிடத்தே வைத்து ஆதரிக்கும் மக்களும்