பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

3. தவம்

268. ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு

மெண்ணிற் றவத்தான் வரும்.

(இ-ள்) இவ்விடத்துப் பகைவரைத் தெறலும், நட்டாசை யாக்குதலுமாகிய வலி ஆராயின், முன்செய்த தவத்தினானே வரும், (எ-று).

இது, பிறரை யாக்குதலும் கெடுத்தலுந் தவத்தினாலே வரு மென்றது. = 8

269. இலர் பல ராகிய காரண தோற் பார்

சிலர் பலர் நோலா த வர்.

(இ-ள்) பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காச ணம், தவஞ் செய்வார் சிலர், அது செய்யாதார் பலர் (எ. று).

இது, பொருளுமிதனானே வருமென்றது. 9.

270. வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ

மீண்டு முயலப் படும்.

(இ-ள்) விரும்பினவற்றை விரும்பினபடியே வருதலால், தவஞ் செய்தலை யிவவிடத்து முயல வேண்டும், (எ-று).

இது போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது. 10

4. கூடாவொழுக்கம

கூடாவொழுக்கமாவது மேற்கூறிய தவத்திற்குப் பொருந் தாத ஒழுக்கம். அ.தியாதோவெனில் தவத்திற்கின்றியமையாத பிரமசரியங் காக்குங்கால் உ ட ன் பழகிய காமம் நலியுமன்றே அ. த ைன ப் பொறுத்தலாற்றாதார் மறைந்தொழுகு மொழுக்கம் என்று கொள்க. இதனாற் கூறியறு இல்வாழ்வார்க்குப் பரதாரம்