பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

4. கூடாவொழுக்கம்

விரும்பாமை கூறினார். இவருக்குத் தம்முடையதாரமும் வி ட வேண்டும் ஆதலின் இதனை விழைச்சி மறுத்தலாயிற்று. இதனை இவ்வாறு கூறாது கூடா வொழுக்கமென்ற தென்னையெனின் ...... மெனவே விழைச்சி தவிர்தல் பெறுதும். அதற்காக இதனைத் தப்ப வொழுகலாகா தென்பதனாற் கூடாவொழுக்கம் என்று கூறப்பட்டது.

271. மனத்தது மாசாக மாண்டார் நீ ராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர்.

(இ-ள் மனத்துக்கண் மாசு உண்டாக வைத்து, மாட்சிமைப் பட்டாரது நீர்மையைப் பூண்டு, பொருந்தாத விடத்திலே மறைந் தொழுகு மாந்தர் பலர், (எ-று) .

இது, பலர்க்குக் கூடாவொழுக்க முண்டென்றது. 1

272. புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி

மூக்கிற் கரியா ருடைத்து.

(இ-ள்) புறம்பு குன்றி நிறம்போன்ற தூய வேடத்தராயிருப் பினும், உள்ளம் குன்றி மூக்குப்போலக் கரியராயிருப்பாரை உடைத்து இவ்வுலகம், (எ-று).

இஃது, அவரை வடிவு கண்டு தேறப்படா தென்றது. 2

273. வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்றோல் போர்த்துமேய்த் தற்று.

(இ-ள்) வலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகிய தவ வுருவங்கோடல், பெற்றமானது பிறர் ஐயப்படாமைக்குப் புலி யினது தோலைப் போர்த்துப் பைங்கூழ் மேய்ந்த தன்மைத்து, (எறு)

மேல் வடிவு கண்டு தவவரென்று கொள்ளப்படாதென்றார்; அவரதனைப் பூண்டு கொள்கின்றது எற்றுக்கென்றார்க்கு அதுவும் தாம் மறைந்தொழுகுதற்காக. - 3

274. தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து

வேட்டுவன் புட்சிமிழ்த் தந்து