பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

பொருட்பால் (70)

யீறாகக்கூறிய அதிகாரங்கள் பத்தும் பெரும்பான்மையும் அமைச் சர்க்கு உரித்தாதலின் அமைச்சியலென்றும், நாடு முதலாகப் டைச்செருக்கிறாகக்கூறிய அதிகாரங்கள் ஐந்தும் பொருளாதலின் பொருளிய லென்றும், நட்பு முதலாகக் கூடாநட்பீறாகக் கூறிய அதிகாரங்கள் ஐந்தும் நட்பின் பகுதியவாதலின் நட்பியலென்றும். பேதைமை முதலாக மருந்தீறாகக் கூறிய அ தி க | ச ங் க ள் பன்னிரண்டுங் கேட்டுக்குக் காரணமாதலின் துன்பவியலென்றும், குடி முதலாகக் கயமையிறாகக் கூறிய அதிகாரங்கள் பதின்மூன்றும் .க்களது இயல்பு கூறுதலின் குடியியலென்றும் ஆகப் பொருட்பால் கூறிய அதிகாரம் எழுபதும்ஆறு பகுதியாயிற்று.

1. அரசியல் (25)

அவற்றுள் அரசியலாவது அரசர் செய்யும் திறன் கூறுதல். அஃது யாங்கனம் கூறினார் எனில் அது கூறிய அதிகாரம் இருபத் தைந்தினும் முற்பட அரசன் உண்டாக்க வேண்டும் பொருளும் அவர்க்கு இன்றியமைய...... * * *

1. இறைமாட்சி

இறைமாட்சியாவது இறைவனது தன்மை கூறுதல். இல் வதிகாரத்துள் உரைக்கின்ற பொருள் அரசரை நோக்கிற்றாதலானும் அரசன் மக்களிற் சிறந்தானாதலானும் இவ்வதிகாசம் முன் கூறப் பட்டது.

38 படைகுடி கூழமைச்சு தட்பர ணாற:

முடையா னர சரு ளேறு

(இ-ள்) படையும் குடியும் கூழும் அமைச்சு ம் நட்பும் அரணு மென்று சொல்லப்பட்ட ஆறு பொருளினையும் உடையவன் அரசருள் ஏறுபோல்வா ன், (எ-று)