பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

1. இறைமாட்சி

383. காட்சிக் கெளியன் கடுஞ்செல்ல னல்லனேன்

மீக்கூறு மன்ன னிலம்.

(இ-ள்) காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற் கூறுதலும் அல்லனாயின், அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர், (எ-று)

இது மன்னன் உலகத்தார் மாட்டு ஒழு குந்திறன் கூறிற்று 5

386 இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த

வகுத்தலும் வல்ல தர சு.

(இ- ள்) பொருள் பெறுவழி முயறலும், அதனை அழியாம சமீட்டலும், அதனைச் சோர்வுபடாமற் காத்தலும், காத்த அதனை வேண்டுவனவற்றுக்கு வகுத்தலும் வல்லவன் அரசனாவான். (எ-று)

பகுத்தல் ஆவது யானை குதிரை முதலிய படைக்குக் கொடுத்து அவையிற்றை யுண்டாக்குதலும் அரண் செய்யவும் படைக்கலன்கள் பண்ணுதல் முதலாயினவற்றுக்கும் கொடுத்தல். இவையெல்லாம் பண்டாரம் ஆதலின் ஒரு பொருளைப் பலவாக வகுத்தல் என்று இது பண்டாரங் கூட்டுமாறு கூறிற்று. 6

387. கொடையளி செங்கோல் குடியோம்ப னான்கு

முடையானாம் வேந்தர்க் கொளி

(இாள் கொடுத்தலும், தலையளி செய்தலும், செங்கோன் மையும், கு டி க ைள ஒம்புதலுமென்று சொல்லப்படுகின்ற நான்கினையு முடையவன் வேந்தர்க்கெல்லாம் விளக்காம், (எ-று)

கொடுத்தல் ஆவது தளர்ந்த குடிக்கு விதையும் எரு முதவி யனவும் கொடுத்தல்; அளித்தல் ஆவது அவரிடத்துக் கொள்ளுங் கடமையைத் தளர்ச்சி பார்த்து இட்டு வைத்துப்பின்பு முதலுண் டானால் கோடல்: செங்கோன்மை ஆவது கொள்ளும் முறையை ஒழியக் கொள்ளாமை, குடியோம்பல் ஆவது தளர்ந்த குடிக்கு இறை இழிப்பித்தல், இது குடிக்கு அரசன் செய்யுந்திறன் கூறிற்று. 7