பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

2. கல்வி

அறிவு கல்வியின் கண்ணாதலான், அ க்கல்வியில்லாதார் கண் புண் ணாயிற்று. இது மேற்கூறிய அதனை வலியுறுத்திற்று. 3.

394. தொட்டனைத் துரற மணற்கேணி மாந்தற்குக்

கற்றனைத் துவ மறிவு.

(இ-ள்) அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்; அது போல, மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம், (எ- று) .

இஃது அறிவுண்டாமென்றது. 4.

393. ஒரு மைக்கட் டான்கற்ற கல்வி யொருவற்

கெழுமையு மேமாப் புடைத்து.

(இ-ள்) ஒருவற்கு ஒரு பிறப்பில் கற்ற கல்வி தானே எழு பிறப்பினும் ஏமமாதலை யுடைத்து, (எ-று).

கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது வாசனை தொடர்ந்து தன்னெறிக்கண் உய்க்குமென்றது. 5

396. கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை.

(இ-ள்) ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி; மற்றவை யெல்லாம் பொருளல்ல, (எ-து)

இது கல்வி அழியாத செல்வமென்றது. {j

397. யாதானு தாடாமா லுரராமா லென்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு.

(இ-ள்) யாதோரிடத்துச் செல்லினும் அதுவே தனது நாடும் ஊரும் போலாம்; ஆதலால், ஒருவன் சாந்துணை யுங் 5 i Jr தொழுகுதல் யாதினைக்கருதியோ, (கா-று).

இது கல்வி எல்லாரானுங் கைக்கொள்ளப்படுவதென்றது. 7

398. உவப்பத் தலைக்கூடி யுள்ள ப் பிரித

லனைத்தே புலவர் தொழில்.