பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

3. கல்லாமை

(இ-ள்) கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி யுரை யாட மறையும், (எ- று).

இது, கல்லாதார்க்குப் பெருமை இல்லை என்றது.

406. மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப் பிறந்து ங்

கற்றா ரனைத்திலர் பாடு.

(இ-ள்) உயர்ந்த குலத்திற் பிறந்தாராயினும், கல்வியில் லாதார் இழிகுலத்துப் பிறந்த கற்றாரோடு ஒத்த பெருமையிலர் ,

இது குலமுடைய ராயினும் மதிக்கப்படாரென்றது. 6

4.07. நரண்மா னுழைபுல மில்லா னெழிலை மண்மாண் புனைபாவை யற்று.

(இ-ள்) நுண்ணிதாய் மாட்சிமைப்பட ஆரா ய்ச்சியையுடைய கல்வியில்லாதான் அழகு, மண்ணினானே நன்றாகச் செய்த பாவை யினது அழகை யொக்கும், (எ-று)

அறிவிற்கு மாட்சியாவது பொருளைக் கடிதிற்காண்டலும், மறவ ாமையும் முதலாயின. இஃது ” | ழகியராயினும் மதிக்கப்படா ரென்றது. 7

408. உளரென்னு மாத்திரைய ர ல் லாற் பயவாக்

களரனையர் கல்லா தவர்.

(இ-ள்) உளரென்னும் அளவினை யுடையாால்லது, பயன் படாத களர் நிலத்தை யொப்பர் கல்லாதவர், (எ-று).

இது பிறர்க்குப் பயன்படாரென்றது. 8

4.09. நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே

கல்லார்கட் பட்ட திரு.

(இ-ஸ்) நல்ல ர்மாட்டு உண்டாகிய வ று ைம போலப், பிறர் க்கு இன்னாமையைச் செய்யும்; கல்லாதார் மாட்டு உண்டாகிய செல்வமும், (எ-து).