பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

3. கல்லாமை

இது செல்வமுண்டாயின், பிறரைத் துன்பமுறுவிப்ப .ெ ன் .” ):›! . 9

4 0. விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநரல்

கற்றாரோ டேனை யவர்.

(இ-ஸ்) விலங்குச் சாதியோடும் மக்களோடும் உள்ள வேறு டுடையர்; விளங்கின நூல்களைக் கற்றவர்களோடு கல்லாதவர், ( -ற).

இது கல்லாதவர் விலங்கென்றது. 10

- =========

4. கேள்வி

கேள்வியாவது கேள்வியினானாய பயன் கூறுதல். நூல்களைக் கற்கமாட்டாதார் அவற்றைக் கற்றார் மாட்டுக் கேட்டலும் அறிவுக் குக் காரணமா மென்பதனால், அதன் பின் கூறப்பட்டது.

411. கற்றில னாயினுங் கேட்க வ.தொருவன்

ஒற்கத்தினூற்றாத் துணை.

(இ-ள்) கற்கமாட்டானாயினுங் கற்றோர்மாட்டே கேட்க: அக்கேள்வி ஒருவன் தளர்ச்சிக்கண் தாங்குவதொரு துணையாம், (எ-று). -

இது கேள்வி வேண்டுமென்றது. 1

412. செவிக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கு மீயப் படும்.

(இ-ள்) செவிக்கு உணவாகிய கேள்வி யில்லாதபொழுது வயிற்றுக்குச் சிறிது உணவு கொடுக்கத் தகும், (எ-று).

சிறிதுணவு என்றார்; பெருகவுண்ணின் கேள்வியை விரும் பாது காம நுகர்ச்சியை விரும்புமாதலான். மேல் கேள்வி வேண்டும்

1. ஒற்கத்துக் கூற்றாந்’ என்பது மணக்பாடம்.