பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

6. குற்றங்கடிதல்

42. செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து.

(இ-ள்) பிறர் மனை நயத்தலும். வெகுளியும், சிறியார் செய் வன செய்தொழுகுதலும் இல்லாதார் ஆக்கம் தலையெடுக்கும் நீர் கமையையுடைத்து (எ-று) .

பிறர்மனை நயத்தல் செருக்கினால் வருதலின், செருக்கு என் றார். சினம் குரோதத்தால் வருதல் சிறியார் செய்வன செய்தலாவது காம நுகர்ச்சியும், சூதும் கள்ளும் வேட்டையும் முதலானவற்றின் மிக்கொழுதல். இதனை வட நூலார் இந்திரிய சயமின்மை என்பர். இவை பெரியரால் கடியப் படுதலின் சிறுமை என்றார், இவை மு ன்று குற்ற மு மில்லாதார் ஆக்க முடையார் என்றதனாலே, இவை உடையார்க்குக் கேடுவரும் என்ற வாறாயிற்று. பிறர்மனை நயத் த லாற் கெட்டான் இ ரா வ ண ன். வெகுளியாற் கெட்டான் செனமே தயன். நுகர்ச்சியாற் கெட்டான் சச்சந்தன். 2

43. இவலுை மாண்பிறந்த மானமு மாணா

வைகைய, மேத மிறைக்கு.

(இ-ள்) உலோபமும், நன்மையைக் கடந்த மானமும், நன் மையைத் தாரக மகிழ்ச்சியுமாகிய விம்மூன்றும் அரசர்க்குக் குற்றமாம் (எ-று) .

இது பொதுப்படக்கூறாது இறைக்கு என்றமையால் பெரும்பான் மை ம் அரசர்க்கே வேண்டுமென்பது கூறிற்று. உலோபம் இரண்டு வகைத்து; தனக்கு முறைமையல்லாத பொருளை விரும்புதலும் உண்டான பொருளைவிடாமையும். அஃதாமாறு பின்பே கூறப்படும். மாண்பிறந்த மானமாவது, தொடங்கின வினை நன்மை பயவாதா யினும் அதனை விட தொழிதல். இதனாற் கெட்டான் துரியோதனன். மாணா உவகையாவது எளியாரையடர்க்கையால் பிறந்ததொரு மகிழ்ச்சியால் வலியா மாட்டும் செல்லுதல். இதனாற் கெட்டான் வாதாபி

434. செயற்பா ல செய்யா திவறியான் செல்வ

முயற்பால தின் றிக் கெடும்.