பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

9 தெரிந்து செயல்வகை

இனம் என்றார் மந்திரிகள் பலர் வேண்டும் என்றற்கு. இஃது எண்ணுதற்காவாரையும் கூறி, எண்ணிச் செய்ய வேண்டும் என் பதும் கூறிற்று. 2

4.62. தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு

மேதப்பா டஞ்சு பவர்.

(இ-ள்) ஆராய்ந்தறிதலில்லாத வினையைச் .ெ ச ய் ய த் தொடங்கார், இகழ்ச்சியாகிய குற்றப்பாட்டிற்கு அஞ்சுபவர், (எ-று).

ஒருவினை செய்ய நினைக்கும்காலத்து நின்றநிலை அறிய வேண்டும் என்றது. 2

463 எண்ணித் துணிக கருமந் துணிந்தபி னெண்ணுவ மென்ப திழுக்கு

(இ-ள்) ஒருவினையைச் செய்யத் துணிவதன் முன்னே அதனால் வரும் பயனை எண்ணிப் பின்பு செய்யத் துணிக; துணிந்தபின் எண் ணுவோ மென்றல் தப்பா மாதலான், (எ-று 1.

காரியம் நின்ற நிலை அறிந்தாலும் எண்ணாது துணித லாகாது என்றது. 3

464. அழிவதாஉ மாவதாஉ மாகி வழிபயக்கு

மூதியமுஞ் சூழ்ந்து செயல்.

(இ-ள்) வினை செய்து முடித்தற்கு அழியும் பொருளும், அது செய்து முடித்தாலுளதாகும் பொருளும், ஆய் நின்று அப்பொரு ளினாற் பின்புண்டாய் வரும் பயனும் எண்ணிப் பின்பு வினை செய்ய வேண்டும், (எ-று).

வழி பயக்கும் ஊதியமாவது முன்பு நன்றாகத் தோற்றிப் பின்புத் திதாகாத வினை, இது முதலாக எண்ணுமாறு கூறுகின்றாராதலின் முற்பட இவை மூன்றும் எண்ணுதல் வேண்டும் என்று கூறிற்று. 4

  • இருதலைப் பகரங்கட்குள் இருப்பவை மணக்குட

வருரை நோக்கிச் சேர்த்தவையாம்.