பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

16. பொச்சாவாமை

இது, பொச்சாப்புடையார்க்குக் காவலில்லை என்றது. 3

534. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா

திகழ்ந்தார்க் கெழுமையு மில்.

(இ-ள்) உயர்ந்தாரால் புகழப்பட்டவையிற்றைக் கடைப் பிடித்துச் செய்தல் வேண்டும். அவற்றைச் செய்யாது இகழ்ந்தவர் களுக்கு எழுபிறப்பினும் நன்மையில்லையாமாதலான், (எ-று).

இஃது, அறத்தின் கண் இகழாமை கூறிற்று. 4

535 உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தா

னுள்ளிய துள்ளப் பெறின்.

(இ-ள்) தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது; பின்பும், அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின், (எ-று).

| Ll LIIT ன்கண் மறவாமை கூறுவார், b ப ட னிப் பொருளின்கண் இறு (IP MD நினைத்ததனை மறவாமை வேண்டுமென்றார். 5

535. அரியவென் றாகாத வில்லையொச் சாவரக்

கருவியாற் போற்றிச் செயின்.

(இ-ள்) செயற்கு அரியவென்று செய்தலாகாதனவில்லை மறவாமையாகிய கருவியாலே பாதுகாத்துச் செய்வனாயின் (எ-று).

இது வினைசெய்யுங்கால் மறவாமை வேண்டுமென்றது. 6

537. பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை

நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

(இ-ள்) மறவியாகின்றது புகழைக்கொல்லும்; அற்றைத் தேட்டுண் அறிவைக் கொல்லுமாறு போல, (எ-று).

புகழ்பட வாழுங்கால் தன் அளவை மறந்து கொடுப்பனாயின் தான் கருதின புகழும் முடியச் செல்லாது அளவிலே நின்று.சாம் இயற்கையாகிய அறிவு நல்குரவினால் சாமாறுபோல என்றவாறா யிற்று. இது கொடையில் கடைப்பிடித்தல் வேண்டும் எ ன் ற து. இவை மூன்றினானும் பொருளில் கடைப்பிடித்தல் கூறிற்று. 7