பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

16. பொச்சாவாமை

538. இறந்த வெகுளியிற் றிதே சிறந்த

வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

(இ-ள்) மிக்க வெகுளியுடையனாதலினும் தீது, மிக்க உவகை யால் உண்டான மகிழ்ச்சியால் தன்னை மறந்திருத்தல்.

இது காமத்தின் கண்ணும் வெகுட்சியின் கண்ணும் கடைப் பிடித்தல் கூறிற்று. 8

539. இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை

வாயி னஃதொப்ப தில்.

(இ-ன்) யாவர்மாட்டும் எல்லா நாளும் தப்புச்செய்யாமை தப்பாமல் வாய்க்குமாயின், அதனையொக்க நன்மை பயப்பது பிறி தில்லை, (எ-று).

இது. முறைசெய்யுங்கால் கடைப்பிடித்துச் செய்ய வேண்டு மென்றது. 9

540. முன்னுறங் காவா திழுக்கியான் றன் பிழை

பின்னு றிரங்கி விடும்.

(இ-ன்) எதிரது ஆகவே பழிவரும் வழியைக் காவாதே அதனை இகழ்ந்து தப்பச்செய்தவன் அத்தப்பினால் வரும் கு ற் ற த் து க் கு இரங்கிவிடும் என்றவாறு.

தன் பழி முன்னுறக் காவாதான் என்று கூட்டுக, மேற் கூறிய வாறு செய்யாதார் முன்பே செய்யப்பெற்றிலேம் என்று இரங்குவர் என்றபடி. 10