பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167

17. செங்கோன்மை

ஒதுவாரும் அறம் செய்வாரும் முறைசெய்யும் அரசன் நாட்ட கத்து உளராவர்; ஆதலான் முதலாயிற்று. இது கல்வியும் அற மும் வளமும் என்றது.

548. வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலது கோடானெனின்.

(இ-ள்) அரசனுக்கு வென்றி தருவது அவன் கைவேலன்று, முறை செய்தல்; அதனைக் கோடச் செய்யாதொழியின், (எ-று)

இது, செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது. &

549. இறைகாக்கும் வையக மெல்லா மவனை

முறைகாக்கு முட்டாச் செயின்.

(இ-ள்) வையகமெல்லாவற்றையும் அரசன் காக்கம், அவ் வாசனை அவன் றான் செய்யும் முறை காக்கும்; அதனைத் தப்பா மற் செய்யின், (எ-று).

இது, தனக்குக் காவலாம் என்றது. Q

550. எண்பதத்தா னாடி முறைசெய்யா மன்னவன்

றண் பதத்தாற் றானே கெடும்

(இ-ள்) எளிய காலத்தோட நூலாராய்ந்து முறைமை செய் யாத அரசன், தனது தண்பதத் லே கெடுப்பாரின்றியும் தானே கெடும், (எ-று) . -

எண்பதமாவது, வந்தவர்கள் குறையைச் சொல்லுதற்கு எளியகாலம்; தண்பதமாவது, குறையைச் சொல்லுதற்குத் தாழ்க் குங் காலம். இது காலம் தப்பாமல் கேட்டுச் செய்யவேண்டும் என் பது உம் முறை செய்யாக்கால் வரும் குற்றமும் கூறிற்று. 10