பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

18. கொடுங்கோன்மை

கொடுங்கோன்மையா வது கொடுங்கோன்மையால் வருங் குற்றங் கூறுதல். அது முறை செய்யாமையும், பிறர் நலியாமற்காவாமை யும், முறைகெடச் செய்தலும், குடிகளுக்குத் தண் டனை ஆராயாது செய்தலும், அல்லவை செய்தலும், குடிகளை இரத்தலுமெனப் பல வகைப்படும். இது மேற்கூறிய செங்கே i ன்மையின் மாறுபட்டு வரு தலின், அதன் பின் கூறப்பட்டது.

5.51. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை ய..தின்றேன்

மன்னாவா மன்னர்க் கொளி.

(இ-ள்) அ சர்க்கு ஒளி நிலைபெறுதல் செங்கோன்மை யானாம்; அஃ ல்ெலையாயின், அரசர்க்கு ஒளி நிலையாதாம், (எ-று)

முறை செய்யா மையால் வரும் குற்றங்கூறுவார், முற்படப்

புக ழில்லை யாம் என் றார் == 1

552. தாடொறு தாடி முறை.ெ ய்யா மன்னவ

னாடொறு நாடு கெடும்.

(இ=ள்) குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து, அதற்குத் தக முறைசெய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும், (எ-று).

இது, ந டு கெடுமென்றது. 2

553. இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா

மன்னவன் கோற்கீழ்ப் படி ன்.

(இ-ள்) நல்குரவினும் செல்வம் அதுன்பமாகும்; முறைசெய் யாத அரசனது கொடுங்கோலின் கீழே குடி யி குக்கின், (எ-று).

இது, பொருளுடையாரும் துன்பமு றுவரென்றது. இவை மூன்றும் முறை செய்யாமையாலே வருங் குற்றங் கூறின. o

554, ஆபயன் குன்று மறுதொழிலோர் நான்மறப்பர்

காவலன் காவா னெனின்.