பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

18. கொடுங்கோன்மை

55 9 . அல் லற்பட் டாற்றா தழுத கண் ரீைரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.

(இ-ள்) நீதியல்லன செய்தலானே அல்லற் பட்டு, அதற்கு ஆற்றாது, அழுத கண்ணிரன்றோ? செல்வத்தைத் தேய்க்கும் படை யாவது, (எ- று) .

இஃது, அவ்வரசன் தான். கெடுமென்றது. இவையிரண்டும் அல்லவை செய்ததனாலே இம்மை மறுமை இழப்பரென்று கூறின. 9

560. வேலொடு நின்றா சிைடுவென் றது போலுங்

கோலொடு நின்றா னிரவு.

( இ-ஸ்) தனியிடத்தே வேலொடு நின்றவன் கையினுள்ளன தாவென்றாற் போலும்; முறைசெய்தலை மேற்கொண்டு நின்றவன் குடிகள் மாட்டு இரத்தல். (வ -ற) .

கோலொடு நிற்றல்- செவ்வை சய் வா ைரப் போன்று நிற்றல்.

நிச்சயித்த கடமைக்கு மேல் வேண்டுகோளாகக்கொளினும், வழி யிற் பறிப்பானோடு ஒக்குமென்றவாறு. I 0

19. வெருவந்த செய்யாமை

வெருவந்த செய்யா மைய ாவது, பிறர்க்கு அச்சம் (வருவன) செய்யாமையும், தனக்கு அச்சம் (வருவன) செய்யாமையும். தான் முறை செய்வாரைப் போன்றிருந்து அதனை உலகத்தார் வெருவு

மாறு செய்வனாயின், அதுவுங் கொடுங்கோலோடு ஒக்குமென்று பின் கூறப்பட்டது.