பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. கண்ணோட்டம்

573. பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

(இ-ள்) நஞ்சு பெய்தது கண்டும் அதனை மாற்றாது உண்டு அமைவர், எல்லாசானும் விரும்பத்தக்க நாகரிகத்தை வேண்டி விரும்புவார், (எ-று).

நாகரிகம்-அறம்பொருள் இன்பத்தின்கண் நற்குணங்கள் பலவும் உடைமை. மறாமையால் கண்ணோட்ட மாயிற்று. இது பொறுத்தலேயன்றித் தமக்குச் செய்யும் தீமைக்கும் உடன் படுபவர் புகழ் வேண்டுபவர் என்றது. 3

7ே4. கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்

குரிமை யுடைத்திவ் வுலகு. (இ-ள்) தங்கருமத்திற்கு அழிவு வாராமற் கண்ணோட வல்ல வர்களுக்கு, இவ்வுலகம் உரிமையாதலை உடைத்து. (எ-று).

இது, நற்குணமாவது கண்ணோட்டமாயினும், அரசர்க்குப் பொருட்கேடு வாராமல் கண்ணோடவேண்டுமென்று எய்தியது விலக்கிக் கூறிற்று. உரிமையிருந்ததென்று பாடம் ஆயினும் அமையும் - 4

575. கண்ணோட்டத் துள்ள துலகிய ல:திலா

குண்மை நிலக்குப் பொறை.

(இ-ள்) உலகநடை கண்ணோட்டத்தின்கண்ணது: ஆதி லால் அஃ நில்லாதார் உளராதல் நிலத்துக்குப் பாரமாம், (எ-று)

இது, கண்ணோட்ட மில்லாதாரை நிலம் பொறாதென்றது 5

575. கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார்

கண்ணோட்ட மின்மையு மில்.

(இ ள்) கண்ணோட்ட மில்லாதார் கண்ணிலரே; கண்ணு டையார் கண்ணோட்டமின்மையுமிலராதலான், (எ-று).