பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

21. ஒற்றாடல்

ஐயம் ஆகிய பொருண்மை தோற்றாது என்றாயிற்று. ஈண்டு நூல் கூறியது எற்றுக்கு எனில், அரசர்க்குக் கல்வி இன்றியமையாதது என்றற்கு. இஃது, ஒற்றுவேண்டுமென்றது. 1.

58.2. கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு

முகாஅமை வல்லதே யொற்று.

(இ-ள்) வினா வப்படாத வடிவோடேகூடிக், கண்ணஞ்சுத லும் இன்றி, அறிந்த பொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்கவல்லவன் ஒற்றவனாவன், (எ-று).

வினாவப்படாத வடிவாவது வணிகரும் பார்ப்பாரும் ஆகிய ஒற்றற்குத்தகை எவ்விடத்தும் சோர்வு இன்றியே அடக்க வல்லவன் ஒற்றன். 2

583. துறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்ந்

தென் செயினுஞ் சோர்வில தொற்று.

(இ-ஸ்) தவஞ்செய்வார் வேடத்தாராகி, நாட்டெல்லையைக் கடந்துபோய் அங்குள்ள செய்தியை ஆராய்ந்த விடத்து அகப்படா மல் துன்பமாயினும் இன்பமாயினும் செய்யினும், தனதுள்ளத் தைச் சோர விடாதவன் ஒற்றனாம், (எ-று). 3

584. மறைந்தவை கேட்கவற் றாகி யறிந்தவை

யையப்பா டி ல்லதே யொற்று.

(இ-ள்) பிறரால் மறைக்கப்பட்டவற்றைக் கேட்டறிய வல்லனாகி, அறிந்தவையிற்றைத் தீர அறியவல்லவன் ஒற்றனா வான், (எ-று).

இவை மூன்றானானும் ஒற்றனிலக்கணங் கூறிற்று. 4

585. எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் றொழில்.

(இ-ள்) பகைவராகியும் நட்டோராகியும் மத்திமராகிய உதா

சீனராகியும் இருக்கின்ற அரசர்க்கும், அவர் சுற்றத்திற்கும், தஞ்