பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

21. ஒற்றாடல்.

சுற்றத்திற்கும், அறம் பொருள் இன்பங்களைப் பற்றி நிகழ்பவை யெல்லாவற்றையும் நாடோறும் பிறர் அறிவதன் முன்னம் தான் அறிதல் வேந்தனது தொழில், (எ-று). 5

5 86. வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்

கனைவரையு மாராய்வ தொற்று.

(இ-ள்) தனக்குக் காரியமானவை பார்த்துச் செய்வாரையும் தமக்குச் சுற்றமாயிருப்பாரும். தம்மை வேண்டாதிருப்பாருமாகிய அனைவரையும் ஆராய்ந்தறிவான் ஒற்றனாவன், (எ-று).

மேல் எல்லார்க்கும் நிகழ்பவை ஒற்றவேண்டும் என்றார்; இது தன்காரியத்தில் செய்வார் செய்கின்ற அளவும் தனக்கு நட்பும் பகையுமாய் இருப்பாரையும் ஒற்றவேண்டும் என்றது.

இவையிரண்டும் ஒற்றவேண்டுமிடங் கூறின. 6

587. ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ

ரொற்றினா லொற்றிக் கொளல்.

(இ-ள்) ஒரொற்றன் அறிந்து சொன்னபொருளைப் பின்னை யும் ஒரொற்றினாலே ஒற்றியறிந்து பின்பு அதனுண்மை கொள்க, (எ-று)

ஒற்றர் தங்களிலே மாற்றாசன் மாட்டும் பொருள் பெற்று மாறு படச் சொல்லுவாரும் உளராதலான் அவர் சொன்ன பொருளைப் பின்பும் ஒருவனைவிட்டு ஆராய வேண்டும் என்றது. T

588. ஒற்றொற் றுணராமை யாள்க வுடன் மூவர்

சொற்றொக்க தேறப்படும்.

(இ-ள்) ஒற்றரை விடுங்கால், ஒருவரையொருவர் அறியாமல் விடுக; மூவர்சொல் உடன் கூடின், அது தெளியப்படுமாதலால், (எ-று);