பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

21. ஒற்றாடல்

இஃது ஒருவர் சொன்னாலும் தெளியப்படாது; மூவர் சொன் னது தெளிவு என்றது. இவை இரண்டும் ஒற்றரை யாளுந்திறங் கூறின. &

589. சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க செய்யிற்

புறப்படுத்தா னாகு மறை.

(இ-ள்) ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால், பிறரறியாமற் செய்க; பிறரறியச் செய்தானாயின், அவர் ஒற்றிவந்த பொருளைப் புறத்துவிட்டானாம், (எ-று),

இஃது. ஒற்றர்க்குச் சிறப்பு செய்யுங்கால் பிறாறியாமற் செய்யவேண்டு மென்றது. 9

590. ஒற்றினா னொற்றிப் பொருடெரியா மன்னவன்

கொற்றங் கொளக்கிடந்த தில்.

(இ-ள்) ஒற்றராலே ஒற்றிப் பொருளை விசாரியாத மன் ன வன் கொள்ளக்கிடந்ததொரு வெற்றி இல்லை, (எ-று).

இஃது, ஒற்றின்மையால் வருங்குற்றம் கூறிற்று. | 0

22. ஊக்கமுடைமை

ஊக்கமுடைமையாவது ஒருவினை செய்யுங்கால் அதனது அருமையை ஓராது இவ்வாறு செய்யக்கடவேனென்று கருதுங் கருத் துடைமை பிறர்நாடு கொள்ளுங்கால் அவ்விடத்துள்ள செய்தியை ஒற்றரால் அறிந்த பின்பு அதனை அறிந்து கொள்ளக்கடவே னென்று நினைக்குங் கருத்து வேண்டுதலின், அதன்பின் கூறப் பட்டது.