பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

6. துாது

(இ- ள்) தன்னரசன் சொன்ன மாற்றத்தையே சொல்லுங்கால் பகையரசன் வெகுண்டானாயின் அது மாற்றுதற்காம் உபாயத்தைக் கற்று. அவ்விடத்து அஞ்சுதலின்றி, வெகுட்சி தீருமாறு இசையச் சொல்லி, நாளோடே கூடச்செய்யத் தகுவன அறிந்து செய்ய

வல்லவன் துTதனாவான், (எ-று) .

தக்கதறிதலாவது சொல்லின வார்த்தையைச் சொல்லாமற். போதலும், வினை செய்து போதலும். இஃது இவ்விடத்திற்கு ஆவன செய்யவேண்டும் என்றது. 9.

690. கடனறிந்து காலங் கருதி யிடனறிந் தெண்ணி யுரை ப்யான் றலை.

(இ-ள்) காரியம் நின்ற முறைமையை யறிந்து காலத்தையும் நிலை த்து, இடமும் அறிந்து, தானேயெண்ணிச் சொல்ல வல்லவன்

தலையான துாதனாவான். (எ-று) .

தலை இடை கடை என மூன்று வகையருள் மேற்கூறின வெல்லாம் இடையும் கடையும் ஆகிய துாதர் இயல்பு கூறினார். இது தலையான தூதரிலக்கணம் கூறிற்று, தலையான துாதன்:தானே காரியம் அறிந்து சொல்லும்; இடையான து. த ன் சொன்ன மாற்றத்தைச் சொல்லும்; கடையான துரதன் ஒலை காட்டும். 1 0